Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதெல்லாம் பொய் நிறுத்துங்க.. வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல்.. மறுத்த மதுவந்தி.. உண்மையில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தனது வீட்டிற்கு வங்கி அதிகாரிகள் யாரும் சீல் வைக்கவில்லை என்று மதுவந்தி தெரிவித்துள்ளார். உண்மையில் என்ன நடந்தது, இவர் வாங்கிய வங்கி கடன் தொடர்பாக அதிகாரிகள் சொன்னது என்ன என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

Recommended Video

    Bangalore-ல் ஒரே நாளில் கொட்டி தீர்த்த கன மழை.. வெள்ளத்தில் மூழ்கிய நகரம் | Oneindia tamil

    சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள ஆசியானா அப்பார்மெண்டில் தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டை வாங்குவதற்குதான் மதுவந்தி கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. 2016ல் இந்துஜா லேலண்ட் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் இந்த கடனை வாங்கியதாக கூறப்படுகிறது.

    2016ம் ஆண்டு சென்னையில் வாங்கிய இந்த கடனுக்கு மதுவந்தி வட்டியும் கொடுக்கவில்லை, முதலும் கொடுக்கவில்லை என்றுதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    கடன்

    கடன்

    1 கோடி ரூபாய் கடன் வாங்கிய மதுவந்தி தொடக்கத்தில் சில தவணைகள் கட்டி இருக்கிறார். ஆனால் அதன்பின் பல்வேறு தவணைகளை இவர் சரியாக கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதற்காக அந்த நிறுவனம் சார்பாக அதிகாரிகள் வந்து சில முறை கேட்டு உள்ளனர். ஒவ்வொரு முறையும் இப்போது கொடுக்கிறேன், அப்போது கொடுக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    ஆனால் கடனுக்கு மதுவந்தி வட்டியும் கொடுக்கவில்லை, முதலும் கொடுக்கவில்லை என்றுதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வட்டி தொகையும் ஏறிக்கொண்டே சென்றுள்ளது. மொத்தமாக வட்டி எல்லாம் சேர்த்து கடன் 1.25 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் கோர்ட் வழியாக அந்த நிறுவனம் மதுவந்திக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    கோர்ட் உத்தரவு

    கோர்ட் உத்தரவு

    ஆனால் நோட்டீஸ் அனுப்பியும் மதுவந்தி கடன் தொகையை கட்டவில்லை. வீட்டிற்கு வாட்ச் அதிகாரிகளையும் சந்திக்க மறுத்ததாக கூறப்படுகிறது. நோட்டீஸுக்கு பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த மதுவந்தி, வீட்டிற்கு அதிகாரிகள் வரும் போது செக் கொடுப்பதாகவும், அடுத்த மாதம் வேறு வங்கியில் இருந்து கடன் தொகை வருகிறது. அதை கொடுக்கிறேன் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

    நோட்டீஸ்

    நோட்டீஸ்

    இதன் பின்பே நோட்டீஸுக்கு பதில் அளிக்கவில்லை, கடன் மோசடி செய்துவிட்டார் என்று இந்துஜா லேலண்ட் நிறுவனம் சில நாட்களுக்கு முன் மதுவந்தி மீது வழக்கு தொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் முடிவில்தான் வீட்டிற்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்தே இந்துஜா லேலண்ட் அதிகாரிகள், போலீசார் மற்றும் வழக்கறிஞர் ஆணையர் ஆகியோர் சேர்ந்து நேற்று இந்த வீட்டிற்கு சீல் வைத்தனர்.

    அதிகாரிகள் சொன்னது என்ன?

    அதிகாரிகள் சொன்னது என்ன?

    இந்த வீட்டை சீல் வைக்கும் போது அங்கிருந்த அதிகாரிகள், நீங்கள் கடந்த மாதமே செக் கொடுப்பதாக சொன்னீர்கள். அதை கொடுத்து இருந்தால் உங்கள் வீட்டை சீல் வைத்திருக்க மாட்டோம். ஆனால் நீங்கள் செக்கும் கொடுக்கவில்லை. வட்டியும் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளனர். இதன்பின்பே கடைசியில் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.

    பொய்

    பொய்

    இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வீடு சீல் வைப்பதாக வெளியாகும் செய்திகள் எல்லாம் பொய். அதை எல்லாம் உடனே நிறுத்துங்கள். எனக்கு அதிர்ச்சியாக, கோபமாக இருக்கிறது. இது தொடர்பாக பொய்யான செய்திகள் வெளியாகி வருகிறது என்று கோபமாக பதில் அளித்துள்ளார். அதாவது தனது வீடு சீல் வைக்கப்பட்ட செய்திகள் எல்லாம் பொய் என்று மறுத்துள்ளார்.

    வீடியோ ஆதாரம்

    வீடியோ ஆதாரம்

    ஆனால் அதே சமயம் இன்றுதான் வழக்கறிஞர் ஆணையரிடமும் வங்கி அதிகாரிகளிடமும் மதுவந்தி கெஞ்சும் வீடியோ வெளியானது. ப்ளீஸ் சார், வீட்டை லாக் செய்ய வேண்டாம். வீட்டிற்கு பூட்டு போட வேண்டும். ஐ பெக் யூ சார்.. அவமானமாக இருக்கும். நான் செக் கொடுத்துவிடுகிறேன். எனக்கு எஸ்பிஐயில் இருந்து பணம் வருகிறது என்று கூறும் வீடியோ வைரலாகி உள்ளது. வீட்டை சீல் வைக்கவில்லை என்று மதுவந்தி மறுத்த நிலையில்தான் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+