சிலுவை, டர்பன், பொட்டு.. இதற்கெல்லாம் இல்லாத தடை ஹிஜாப்புக்கு மட்டும் ஏன்? ஹைகோர்ட்டில் பரபர வாதம்
பெங்களூர்: ‛‛சிலுவை, டர்பன், பொட்டு இதற்கெல்லாம் இல்லாத தடை ஹிஜாப்புக்கு மட்டும் ஏன்'' என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடக்கும் ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் மாணவிகள் தரப்பு வக்கீல் ரவிவர்மகுமார் வாதாடினார்.
கர்நாடகத்தில் சமீபத்தில், சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் சீருடையை கட்டாயமாக்க வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டது. ஹிஜாப் தடையை எதிர்த்து உடுப்பி மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி கிருஷ்ணா தீட்சித் விசாரணை நடத்தினார்.
இந்த வழக்கு மூவர் பெஞ்சுக்கு மாற்றம் செய்யப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி அமர்வு விசாரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்த அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

4வது நாள் விசாரணை
மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ளதால் மதம் சார்ந்த ஆடைகளை மாணவ-மாணவிகள் அணிய கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே இன்று 4வது நாளாக மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மாணவிகள் தரப்பு வக்கீல் ரவிவர்ம குமார் வாதத்தை துவக்கினார்.

ஒரு ஆண்டுக்கு முன் அறிவிப்பு
கர்நாடக கல்வி சட்டத்தின் அடிப்படையில் சீருடையை மாற்ற வேண்டும் என்றால் ஒரு ஆண்டுக்கு முன்பே அதுதொடர்பாக அறிவிப்பை பெற்றோர்களிடம் வழங்க வேண்டும். ஹிஜாப்பை தடை செய்ய வேண்டும் என்றால் ஒரு ஆண்டுக்கு முன்பே அறிவிப்பு கொடுத்திருக்க வேண்டும். இந்த சட்டத்தில் ஹிஜாப் தடை க்கான விதிகள் எதுவும் இல்லை. எதன் அடிப்படையில் ஹிஜாப்புக்கு தடை விதித்து, மாணவிகளை வகுப்புக்கு வெளியே நிறுத்தினார்கள் என்ற கேள்வி எழுகிறது.

மதம்சார்ந்து வேறுபடுத்துவது ஏன்
மேலும் ஹிஜாப்பை மட்டும் எதற்காக அரசு கையில் எடுத்துள்ளது. அரசு உத்தரவிலும் பிற மதம்சார்ந்த் அடையாளங்களை கருத்தில் கொள்ளாமல் ஹிஜாப்பை மட்டும் குறிப்பிட்டது ஏன். ஏனென்றால் அது அவர்களின் (ஆட்சியாளர்களை மறைமுகமாக குறிப்பிடுதல்) மதம் இல்லை. இதன்மூலம் முஸ்லிம் மாணவிகளை மதம்சார்ந்து வேறுபடுத்துவது உறுதியாக தெரிகிறது.

சிலுவை, டர்பன், பொட்டு
துப்பட்டா, வளையல்கள், தலைப்பாகை (டர்பன்), சிலுவை, பொட்டு போன்ற நூற்றுக்கணக்கான மதச் சின்னங்களை தினமும் மக்கள் அணியும் போது ஹிஜாப் ஏன் தனித்து காட்டப்படுகிறது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடமும் மதச் சின்னங்களை என்னால் காட்ட முடியும். அரசாங்கம் ஏன் ஹிஜாபை மட்டும் அணியக் கூடாது என்று பாகுபாட்டைச் செய்கிறது? வளையல்கள் அணிந்துள்ளார்களே? அவை மதச் சின்னங்கள் இல்லையா? ஏன் முஸ்லீம் பெண்களை மட்டுமே நீங்கள் தேர்வு செய்கிறீர்கள்? வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பப்படுவதற்கு மாணவிகளின் மதம் மட்டுமே காரணமாகும். இது அரசியலமைப்பின் 15 வது பிரிவுக்கு எதிரானது. இவ்வாறு அவர் வாதாடினார்.
பின்னர் வழக்கு விசாரணையை நாளை மதியம் 2:30 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். நாளை 5வது நாளாக விசாரணை நடைபெற உள்ளது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications