அந்தரங்க உறுப்பில் மிதித்த 2 பேர்..நடுரோட்டில் அலறிய பெண்.. அதிர்ந்துபோன பெங்களூர்
பெங்களூர்: பெங்களூர் சிக்பேட்டையில் உள்ள ஜவுளி கடையில் சேலை திருடியதாக 55 வயது நிரம்பிய பெண்ணை சாலையில் இழுத்து போட்டு சரமாரியாக தாக்கி வயிறு, அந்தரங்க உறுப்பில் மிதித்து துன்புறுத்திய கடை உரிமையாளர், ஊழியர் என 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.
பெங்களூர் சிக்பேட்டையில் ஏராளமான துணிக்கடைகள் உள்ளன. மொத்தமாகவும், சில்லறை விலையிலும் அங்கு துணிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறைந்த விலைக்கு துணிகள் விற்பனை செய்யப்படும் என்பதால் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த சிக்பேட்டையில் உள்ள அவென்யூ ரோட்டில் உமேத் ராம் (வயது 44) என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார். மகேந்திர சீர்வி (25) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி அவரது கடையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடையின் வெளியே பட்டு சேலைகள் இருந்த மூட்டையை பெண் ஒருவர் நின்றுள்ளார். அதன்பிறகு அவர் 61 சேலைகள் இருந்த பண்டலை இழுத்து சென்று திருடியதாக கூறப்படுகிறது. பண்டல் மாயமானதால் உரிமையாளர் உமேத் ராம் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது சேலை பண்டலை, அந்த பெண் திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெண் மீண்டும் கடைக்கு அருகே வந்துள்ளார். அந்த பெண்ணை அடையாளம் கண்டு கொண்ட உமேத் ராம், தனது கடையில் வேலை செய்யும் மகேந்திர சீர்வியுடன் சேர்ந்து அவரை மடக்கி பிடித்தார்.
நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினார். இரக்கமின்றி அந்த பெண்ணை 2 பேரும் ஷூ காலால் மிதித்தும், தலைமுடியை பிடித்தும் கொடூரமாக தாக்கினார்கள். வயிறு, அந்தரங்க உறுப்பில் அவர்கள் மிதித்து கோபத்தை காட்டினார். இதனால் அந்த பெண் வலியால் அலறி துடித்தார்.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் ஏராளமானவர்கள் இருந்தாலும் யாரும் அந்த பெண்ணை காப்பாற்ற செல்லவில்லை. மாறாக அவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செயத்னர். இந்த வீடியோ இணையதளங்களில் பரவிய நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து சிட்டி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை தாக்கிய வழக்கில் உமேத் ராம் மற்றும் ஊழியர் மகேந்திர சீர்வியை கைது செய்தனர்.
அதன்பிறகு உமேத் ராம் கொடுத்த புகாரில் அந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து திருடப்பட்ட சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே பெண்ணை கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
-
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications