பெண் உறுப்பில் பாட்டிலை நுழைத்து.. பெங்களூரை அதிர வைத்த கொடுமையான கூட்டு பலாத்காரம்.. 6 பேர் கைது
பெங்களூர்: பெண் உறுப்புக்குள் இரக்கமின்றி பாட்டிலை நுழைத்து கொடுமைப்படுத்தி, அந்த இளம் பெண்ணை கும்பலாக பலாத்காரமும் செய்தவர்களை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
பலாத்காரத்தில் ஈடுபட்டது வங்கதேச கும்பல் என்பது மற்றொரு அதிர்ச்சி தகவலாகும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில் ஒரு பெண்ணின், பிறப்பு உறுப்புக்குள் பாட்டிலை ஒரு கும்பல் புகுத்துவதோடு, கும்பலாக பலாத்காரம் செய்யப்படுவது போன்ற காட்சி இருந்தன.

பெங்களூர் வீடியோ
இதை பார்த்தவர்களுக்கு கூட பதற்றம் ஏற்பட்டுவிடும் என்ற அளவுக்கு கொடுமையான வீடியோவாக இருந்துள்ளது. இந்த தகவல் காவல்துறைக்கும் சென்றது. இதையடுத்து பெங்களூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கின்றனர்.

அசாம் போலீஸ் சந்தேகம்
பலாத்காரத்தில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பல் புகைப்படத்தை வைத்து, அவர்கள் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என போலீசார் நினைத்தனர். அசாம் மாநில காவல்துறை இது தங்கள் மாநிலத்தில் நடந்த பலாத்காரம் என்று நினைத்து குற்றவாளிகளை தேட ஆரம்பித்தது. ஆனால் சம்பவம் பெங்களூரில் நடந்தது.

வழக்குகள்
இதுகுறித்து பெங்களூர் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கைதான நபர்களிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு, பலாத்காரம், தாக்குதல் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளோம்.

வங்கதேச கும்பல்
2 பெண்கள் உட்பட 6 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். குற்றவாளிகள் அனைவரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களது சொந்த நாடு வங்கதேசம். பணப் பிரசசினை தொடர்பாக, பெண்ணை வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் கடத்தி வந்துள்ளனர். அந்த பெண் தற்போது வேறு மாநிலத்தில் உள்ளார். அவரை அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications