பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளை சட்டசபை கூடும்.. எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.. சபாநாயகர் அடுத்த அதிரடி

கர்நாடகா சட்டசபையில் நாளை முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடக சபாநாயகர் அதிரடி... மேலும் 14 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்

    பெங்களூர்: கர்நாடகா சட்டசபையில் நாளை முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதனால் நாளை கர்நாடகா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

    கர்நாடக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 3 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 14 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி சார்பாக குமாரசாமி நடத்தி வந்த ஆட்சி பெரும்பான்மை இல்லாமல் கலைந்தது. 16 கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி கலைந்தது.

    மேலும் 14 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்.. மொத்தம் 17 பேர்.. கர்நாடக சபாநாயகர் அதிரடி! மேலும் 14 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்.. மொத்தம் 17 பேர்.. கர்நாடக சபாநாயகர் அதிரடி!

    ஆட்சி பொறுப்பு

    ஆட்சி பொறுப்பு

    16 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்த நிலையில்கட்சி தாவல் தடை சட்டத்தை மீறியதாக கூறி 3 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் மகேஷ் கும்தஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோலி மற்றும் கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ சங்கர் ஆகியோரை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். அதற்கு மறுநாள் கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் இன்று கூடுதலாக 14 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

    என்ன ஆட்சி

    என்ன ஆட்சி

    கடந்த வெள்ளிக்கிழமை எடியூரப்பா ஆட்சி பொறுப்பேற்றதை அடுத்துபெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவருக்கு ஒருவாரம் தருவதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாககர்நாடகா சட்டசபையில் நாளை முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதனால் நாளை காலை கர்நாடகா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

    கேட்டுக்கொண்டார்

    கேட்டுக்கொண்டார்

    எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடக்கும். நாளை பெரும்பான்மையை நிரூபிப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார். அவர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும், நாளை சட்டசபைக்கு அனைத்து உறுப்பினர்களும் கண்டிப்பாக வர வேண்டும். என்று சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    என்ன உள்ளது

    என்ன உள்ளது

    தற்போது சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 207 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவை 104 எம்.எல்.ஏக்கள். சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 105 ஆக உள்ளது. இதனால் 1 எம்.எல்.ஏ. ஆதரவு கூடுதலாக இருப்பதால் எடியூரப்பா அரசு தப்புகிறது.

    English summary
    Yediyurappa government in Karnataka will see floor test tomorrow says the speaker Ramesh Kumar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X