பெங்களூரை புரட்டிப்போடப்போகும் மழை.. 5 நாளுக்கு மஞ்சள் அலர்ட்! மின்தடைக்கும் வாய்ப்பாமே! உஷார்
பெங்களூர்: பெங்களூர் உள்பட கர்நாடகாவில் உள்ள 11 மாவட்டங்களில் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதோடு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் இந்த 5 நாட்களும் என்ன நடக்கும்? என்பது பற்றி முக்கிய தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக பெங்களூர் உள்ளது. கர்நாடகாவின் தலைநகராக இருக்கும் பெங்களூர் ஆண்டுதோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஐடி நிறுவனங்கள் நிறைந்த பகுதிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டன. இதனால் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டது.

இதற்கிடையே தான் தற்போது பெங்களூரில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது. இன்று மாலை பெங்களூர் சிவாஜி நகர் உள்பட பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
இதன் தொடர்ச்சியாக தான் தற்போது பெங்களூர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அதாவது கர்நாடகாவின் தெற்கு உள்பகுதி மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛அடுத்த 5 நாட்களில் கேரளா, லட்சத்தீவுகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான பரவலான மழையும், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தென்பகுதிகளில் பரவலாக மழையும் பெய்யக்கூடும். கர்நாடகாவை பொறுத்தமட்டில் பெங்களூர் உள்பட 10 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூர், குடகு, மைசூர், உடுப்பி, கலபுரகி, சிவமொக்கா, சித்ரதுர்கா, ஹாசன், சாம்ராஜ்நகர், சிக்கமகளூர், தட்சின கன்னடா மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இன்று முதல் 5 நாள் மழையோடு, சூறைக்காற்றும் வீச வாய்ப்புள்ளது. இதனால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்படவும், போக்குவரத்து நெரிசல் உருவாகவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் முதல் இப்போது வரை பெங்களூரில் 277 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது குறைவாகும். கடந்த ஆண்டு இந்த காலக்கட்டத்தில் பெங்களூர் நகர் 421 மில்லிமீட்டர் மழையை பெற்று இருந்தது. இந்நிலையில் தான் தற்போது 5 நாள் பெங்களூருவுக்கு மஞ்சர் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த 5 நாளும் மழை வெளுத்து வாங்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக நாளை மாலை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே தான் மழை வெள்ள நிவாரண பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என கர்நாடகா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெங்களூர் நகர மேம்பாட்டு துறையை கையில் வைத்திருக்கும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் இன்று பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அப்போது பெங்களூரில் வெள்ளம் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை பணியை விரைவாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications