நாளைக்கு உங்களையும் மூட்டை கட்டிருவாங்க.. பிரஸ் மீட்டில் செய்தியாளர்களை பார்த்து சொன்ன ப.சிதம்பரம்!
காரைக்குடி : "நாளைக்கு உங்களை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு ஒரு நாடு ஒரே பத்திரிகை என்று அறிவித்துவிடுவார்கள். ஒரு நாடு ஒரு தொலைக்காட்சி என்று அறிவிப்பார்கள்." என்று செய்தியாளர்களைப் பார்த்துத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பாஜக அரசின் 'ஒரே நாடு' நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் பேசிய அவர், ஆறு ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கின்றனர். அவர்கள் விற்கும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியதே காங்கிரஸ்தான். அவர்களால் ஆக்க முடியாது. அழிக்கத்தான் முடியும் என பாஜக அரசைச் சாடியுள்ளார்.

தவறான எண்ணம்
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நம் நாட்டில் 75 ஆண்டுகள் சுதந்திரம் நிலைத்திருக்கிறது. இதற்கு அடித்தளமிட்டவர் ஜவஹர்லால் நேரு. இது ஒரு நாடு தான். இல்லை என்று சொல்லவில்லை. அனைத்திலும் ஒரே நாடு என்ற எண்ணம் தவறானது. நானும் என்னுடைய கட்சியும் நீண்ட நாட்களாக எச்சரித்து வருகிறோம். இந்தியா ஒரே நாடு என்றாலும் இந்த நாட்டிற்குள் பல மாநிலங்கள், பல மொழிகள், பல கலாசாரங்கள், பழக்கவழக்கங்கள் உள்ளன.

மாநில அரசு எதற்கு?
நீட் தேர்வை எதிர்ப்பதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நான் ஒரு காரணத்தைத்தான் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்துகிறேன். ஒரு மாநிலம் தன்னுடைய நிதியில் இருந்து தன்னுடைய மாநில மக்களுக்காக தன்னுடைய பொறுப்பில் கல்லூரி நிறுவினால், அதில் எந்த மாணவர்களை சேர்ப்பது என்று அந்த மாநிலத்திற்கு முடிவு எடுப்பதற்கு அதிகாரம் கிடையாதா? மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியில் இறங்கக்கூடாது. நாடு முழுவதும் ஒரே தேர்வு என்றால் மாநில அரசு எதற்கு? மாநில உயர் கல்வி அமைச்சர் எதற்கு? மத்திய அரசுதான் எல்லா முடிவும் எடுக்கும் என்றால், சும்மா பொம்மை அரசாக மாநில அரசுகள் இருக்குமா?

ஒரு நாடு எங்கு போய் நிற்கும்
ஒரு நாடு ஒரே அடையாள அட்டை, ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை, ஒரு நாடு ஒரு தேர்வு, ஒரு நாடு ஒரு மொழி, என்பதில் ஆரம்பித்து ஒரு நாடு ஒரே கலாச்சாரம், ஒரு நாடு ஒரே பழக்கவழக்கம், ஒரு நாடு ஒரே உடை, ஒரு நாடு ஒரே கட்சி, ஒரு நாடு ஒரே தலைவர் என்று போய் நிற்கும். இதே போக்கில் சென்றால் ஜனநாயகம், சர்வாதிகாரமாக மாறிவிடும். இதை கடுமையாக எதிர்க்க வேண்டும். இந்த விபரீதத்தை உணர்ந்து கொள்ளாமல் இருந்தால் மிகப் பெரிய தவறு.

உங்களை எல்லாம் மூட்டை
எதற்காக மொழி வாரியாக மாநிலங்கள் என்று நம்முடைய மூத்த தலைவர்கள் அன்று பிரித்தார்கள்? அந்தந்த மாநிலத்தில் உள்ள மக்கள் அவர்கள் பல பொருள்களில் சுயாட்சி பெற்ற அமைப்பாக சுயமாக சிந்தித்து சுயமாக முடிவு எடுக்கக்கூடிய அமைப்பாக மாநில அரசுகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான். அதை எல்லாம் கெடுப்பதற்கு அழிப்பதற்குத்தான் இந்த ஒரு நாடு ஒரே மொழி என்ற நிலைப்பாடு." எனத் தெரிவித்தார். மேலும், செய்தியாளர்களை நோக்கி, "நாளைக்கு உங்களை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு ஒரு நாடு ஒரே பத்திரிகை என்று அறிவித்துவிடுவார்கள். ஒரு நாடு ஒரு தொலைக்காட்சி என்று அறிவிப்பார்கள்." என்று தெரிவித்தார்.

எங்கு சென்று கொடியேற்றுவது?
மேலும் பேசிய ப.சிதம்பரம், "ரேஷன் கடைகளில் கட்டாயம் தேசியக்கொடி வாங்க வேண்டும் என்று கூறுவது தவறு. வீடு இல்லாதோர் எங்கு சென்று கொடியேற்றுவார்கள். கொடியை திணிக்கக் கூடாது. விரும்பி வாங்க வேண்டும். மேலும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என ஒருபுறம் பிரசாரம் செய்கின்றனர். மற்றொருபுறம் பிளாஸ்டிக் கொடியை ஏற்றுங்கள் என்று சொல்கின்றனர்." என விமர்சித்தார்.
-
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே -
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே











Click it and Unblock the Notifications