ஜிஎஸ்டி - தங்கத்திற்கு 5% வரி - ஜூன் 3ல் அறிவிப்பு?
தங்கம் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு எவ்வளவு என்பது குறித்து, வரும் ஜூன் 3ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை ஜூலை மாதத்தில் இருந்து அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இது வரையில் தங்கம் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு எவ்வளவு என்பது என முடிவு செய்து அறிவிக்கவில்லை. தங்கத்திற்கு 5 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி ஜூலை 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது. இவற்றில் வரி விதிப்பு 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு பிரிவாக வரி விதிப்பு இருக்கும்.

தங்கத்திற்கு எத்தனை சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. தங்கத்திற்கு 5% வரை வரி விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தங்கத்திற்கு இறக்குமதி வரி 10 சதவிகிதம், 1 சதவிகிதம் வாட் வரி, 1 சதவிகிதம் கலால் வரி விதிக்கப்படுகிறது.
தங்கத்தில் முதலீடு செய்வது தமிழக மக்களின் பாரம்பரியமாக இருக்கிறது. மற்ற பங்குசந்தை, ரியல்எஸ்டேட் போன்ற துறைகளில் பண மதிப்பு நிலையாக இல்லாமல், அடுத்தடுத்து மாற்றங்கள் ஏற்படுவதே இதற்கு காரணமாகும். இதற்கிடையே, தங்கம் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு வரும் 3ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.
தங்கத்திற்கு ஜிஎஸ்டி 2 சதவீதத்துக்குள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று நகை விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். தங்கம் மீதான ஜிஎஸ்டி வரி அதிகமாக இருந்தால் அதிகளவில் பாதிப்பு ஏற்படும். தங்கம் விலை உயரும் அபாயம் ஏற்படும். கடத்தல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் தங்கத்திற்கு 5 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications