இந்தியாவில் தங்கம் இறக்குமதி 2 மடங்கு உயர்வு - வெள்ளி சரிவு

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜிஎஸ்டியால் தங்கம் விலை அதிகரித்துள்ளதாக கூறினாலும் நகை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் 11.25 பில்லியன் டாலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு உயர்வாகும். முதல் காலாண்டில் பண்டிகை மற்றும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கத்தின் தேவை அதிகரித்தது.

இதனால் மொத்தம் 1,125 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டு இதே காலாண்டில் 490 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.

தங்க நுகர்வில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் உள்ளது. ஜூவல்லரி துறையின் தேவை அதிகரிப்பு காரணமாகத்தான் தற்போது தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது.

தங்கம் சேமிப்பு

தங்கம் சேமிப்பு

இந்திய இல்லத்தரசிகள் தங்க நகை வாங்குவதில் அதிக ஆர்வம் செலுத்த காரணம் அதனை முதலீடாக பார்ப்பதனால்தான். தங்கம் சேமிப்பிற்கான சிறந்த உபகரணம் அல்ல என்று மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் எச்சரித்தும் மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் குறைந்தபாடில்லை. இந்தியா சீனா இடையே தங்கம் இறக்குமதியிலும் போட்டி நிலவுகிறது.

தங்கம் இறக்குமதி அதிகரிப்பு

தங்கம் இறக்குமதி அதிகரிப்பு

இந்தியாவில் நடப்பு நிதியாண்டு ஜூன் மாதத்தில் மட்டும் தங்கம் இறக்குமதியின் மதிப்பு 120 கோடி டாலரிலிருந்து 245 கோடி டாலராக உயர்ந்துள்ளது. தங்கம் இறக்குமதி அதிகரித்தது நடப்பு கணக்கு பற்றாக்குறையில் எதிரொலிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இரு மடங்காக உயர்வு

இரு மடங்காக உயர்வு

நடப்பு ஆண்டின் முதலாம் காலாண்டில் தங்கம் இறக்குமதி இரட்டிப்புக்கும் அதிகமாகி 11.25 பில்லியன் டாலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.ஏப்ரல்-ஜூன் 2016-17-ல் தங்கம் இறக்குமதி 4.90 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்ததாக மத்திய வணிகத்துறை அமைச்சகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

வர்த்தகப்பற்றாக்குறை

வர்த்தகப்பற்றாக்குறை

ஜூன் காலாண்டில் தங்க இறக்குமதி அதிகரித்துள்ளதால் வர்த்தக பற்றாக்குறை 1,296 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் வர்த்தகப் பற்றாக்குறை 811 கோடி டாலராக இருந்தது.

வெள்ளி இறக்குமதி குறைவு

வெள்ளி இறக்குமதி குறைவு

மாறாக ஜூன் மாதத்தில் வெள்ளி இறக்குமதி 28.6% குறைந்து 178 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.

வெள்ளி பொருட்கள் விற்பனைக்கு 3 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் வெள்ளி வியாபாரத்தில் ஈடுப்பட்டவர்கள் 50 சதவீதம் பேர் இன்னும் ஜிஎஸ்டி பதிவெண் பெறாமல் வெள்ளிக்கட்டி விற்பனை செய்ய முடியவில்லை.

Women Stole Gold in Mixi Motor-Oneindia Tamil
வெள்ளி விற்பனை சரிவு

வெள்ளி விற்பனை சரிவு

வெள்ளிக்கடைகளில் வெள்ளிப்பொருட்களின் விற்பனை 30 சதவீதம் மட்டுமே நடக்கிறது. கடந்த 1ஆம் தேதி 42 ஆயிரத்திற்கு ஒரு கிலோ வெள்ளிக்கட்டி, 20 நாட்களில் கிலோவுக்கு 4 ஆயிரம் சரிந்துள்ளது. வெள்ளிக்கட்டிகள், வெள்ளிப்பொருட்கள் விற்பனை குறைந்ததால், இறக்குமதியும் குறைந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India gold imports more than doubled to $11.25 billion during the first quarter of this fiscal, driven by seasonal and festival demand.Gold imports stood at $4.90 billion in April-June 2016-17, according to the data of the commerce ministry.
Please Wait while comments are loading...