பொத்துனு விழும் தங்கம் விலை! இப்போ வாங்கலாமா? இல்லை காத்திருக்கலாமா! ஆனந்த் சீனிவாசன் நறுக் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் எப்போது முடிந்ததோ.. அப்போது முதலே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 22 கேட் தங்கம் ஒரு கிராம் 270 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதற்கிடையே தங்கத்தை இப்போதே வாங்கலாமா.. இல்லை காத்திருந்து வாங்கலாமா என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் எப்போது டிரம்ப் வெற்றி அடைந்தாரோ.. அப்போது முதலே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிபர் தேர்தலுக்கு முன்பு 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,370ஆக இருந்தது.

anand srinivasan personal finance

தங்கம் விலை: ஆனால், அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்ற உடனேயே தங்கம் விலை சரியத் தொடங்கிவிட்டது. இன்றைய தினம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் மேலும் ரூ.40 குறைந்து ரூ.7045க்கு விற்கப்பட்டது.. இப்படி தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதேநேரம் பொதுமக்களுக்கு ஒரு சந்தேகமும் இருக்கிறது. அதாவது தங்கத்தை இப்போதே வாங்கலாமா.. இல்லை கொஞ்சக் காலம் காத்திருந்தால் மேலும் குறையுமா என யோசிக்கிறார்கள்.

இதற்கான பதிலை ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார். தங்கம் விலை ஏன் குறைகிறது.. எவ்வளவு காலம் இதேபோல குறையும். மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து அவர் எளிமையாக விளக்கியிருக்கிறார்.

ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை டாமல்னு விழுந்து இருக்கு.. பங்குச்சந்தையில் இருக்கும் கோல்ட் பீஸ் கூட ரூ.2 வரை குறைந்துள்ளது.. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை கணிசமாகக் குறைந்து இருக்கிறது. அதிகபட்ச விலையில் இருந்து 5% அதாவது ரூ.300 முதல் ரூ.350 வரை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்து இருக்கிறது. இதனால் தங்கம் விலை நிச்சயம் தொடர்ந்து குறையவே செய்யும்.

அதேநேரம் ரூ. 50, ரூ. 100 எப்போது கூடுதலாகக் குறையும் என்றெல்லாம் பார்க்காதீர்கள். இப்போதே தங்கத்தை வாங்கலாம். சொல்லப்போனால் தங்கம் வாங்க எனக்குத் தெரிந்த வரை இதுதான் மிகச் சிறந்த நேரமாக இருக்கும். அதேநேரம் சிலர் தங்கம் விலை விழுந்தது விழுந்தது தான்.. இனி அதிகரிக்க வாய்ப்பே இல்லை எனச் சிலர் சொல்லலாம். ஆனால், அப்படி எல்லாம் இல்லை.. தங்கம் விலை சீக்கிரமே மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். அதிகபட்சம் 1.5 ஆண்டுகள் தான்.

டிரம்ப் காரணம்: ஏனென்றால் டிரம்ப் ஒரு பக்கம் வட்டி விகிதத்தைக் குறைப்பேன் என்கிறார். வேகமாக வட்டி விகிதத்தைக் குறைத்தால் அங்குப் பணவீக்கம் வந்துவிடும். அப்போது மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கிவிடும். அவரது கொள்கைகளால் விலைவாசி அதிகரிக்கும். இதனால் தங்கம் விலை அதிகரிக்கும்.

அதாவது, டிரம்பின் கொள்கைகளைச் செயல்படுத்தினால் உண்மையில் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கவே செய்யும். ஆனால், அது அமெரிக்க மக்களுக்குப் புரியவே குறைந்தது 1.5 ஆண்டுகள் ஆகும். டிரம்ப் கொள்கைகளைச் செயல்படுத்தும் போது தொடக்கத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் நன்றாக இருப்பது போல இருந்தால் பிறகு அது பொத்தென விழும். ஆனால், அதற்கு டைம் இருக்கிறது.

குறையும்: அமெரிக்காவில் டிரம்ப் ஜனவரி மாதம் தான் அதிபராகப் பதவியேற்பார். எனவே, அதுவரை தங்கம் விலை இதேபோல இருக்கும். அல்லது குறையவும் கூட வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த காலகட்டத்தில் நாம் தங்கத்தை வாங்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.

அதேநேரம் தங்கம் விலை எப்படிக் குறைகிறதோ.. அதேபோல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிகிறது. இதனால் வெளிநாட்டில், அதாவது டாலர் மதிப்பில் தங்கம் விலை பெரியளவில் குறைந்தாலும் கூட அது இந்தியாவில் ரூபாய் மதிப்பில் அதே அளவு குறையும் என்று சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+