மாதம் ₹10,000 வாடகை கொடுக்கிறீங்களா? இதே பணத்தில் வீடு வாங்கிய ரகசியம்.. 2026ல் லாபம் தரும் கணக்கு
சென்னை: மாதம் ₹10,000 வாடகை கொடுக்கிறீங்களா? இதே பணத்தில் வீடு வாங்க முடியுமா? 2026ல் இப்படியொரு லாப கணக்கு இருக்கா என்று யோசிக்கிறீங்களா? வெறும் பண ரீதியாகப் பார்த்தால் இதில் பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.. அதை பற்றி இங்கே நாம் சுருக்கமாக பார்க்கலாம்.
வாடகை வீட்டில் இருப்பதா அல்லது கடன் வாங்கி சொந்த வீடு கட்டுவதா என்கிற குழப்பம் இன்று நேற்றல்ல, பல காலங்களாகவே எல்லா குடும்பங்களிலும் இருக்கும் ஒரு பெரிய கேள்விதான். ஒவ்வொரு மாசமும் வீட்டு உரிமையாளரிடம் வாடகையை கொடுப்பதற்கு பதில், அந்த பணத்தை வங்கியிடம் இஎம்ஐ தொகையாகக் கொடுத்தால் ஒரு நாள் வீடு நமக்கு சொந்தமாகிவிடும் என்பதுதான் பலருடைய கணக்காக இருக்கிறது.

சொந்த வீடு வாங்குவதில் இருக்கும் முதல் லாபம் அது ஒரு நிரந்தர சொத்து என்பதுதான். நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு 1 மாத தவணையும் உங்களை வீட்டின் உரிமையாளராக மாற்றும்.
வாடகை வீடு & சொந்த வீடு
நிலத்தின் விலை 10 வருஷத்தில் பல மடங்கு உயரும்போது, உங்கள் முதலீடு பெரிய லாபத்தைத் தரும். இதைவிட முக்கியமானது மன அமைதி தான். வீட்டு உரிமையாளர் எப்போது காலி செய்ய சொல்வாரோ என்ற கவலை இருக்காது. அதேபோல், வீட்டை நமக்குத் தகுந்தபடி மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இது ஒரு சமூக அந்தஸ்தையும், எதிர்காலத்திற்கான பாதுகாப்பையும் கொடுக்கிறது..
அதே நேரத்தில், வாடகை வீட்டில் இருப்பதிலும் சில வசதிகள் உள்ளன. பொதுவாக ஒரு வீட்டின் விலையை ஒப்பிடும்போது, அதன் வாடகை மிகக் குறைவாகவே இருக்கும். உதாரணமாக, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டிற்கு நீங்கள் 15,000 ரூபாய் வாடகை கொடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
இஎம்ஐ கடன் தொகை
ஆனால், அதே வீட்டைக் கடன் வாங்கி வாங்கினால் உங்கள் இஎம்ஐ தொகை 40,000 ரூபாய்க்கு மேல் வரும். மீதமுள்ள 25,000 ரூபாயைச் சரியாக மற்ற திட்டங்களில் முதலீடு செய்தால், 20 ஆண்டுகளில் வீட்டின் மதிப்பை விட அதிகப் பணம் உங்கள் கையில் இருக்கும். இது ஒரு கணக்கு ரீதியான புத்திசாலித்தனம்..
யார் சொந்த வீடு வாங்கலாம் என்றால், ஒரே ஊரில் 15 அல்லது 20 ஆண்டுகள் நிலையாக இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு. ஆனால், வேலை நிமித்தமாக அடிக்கடி ஊர் மாறுபவர்களுக்கு வாடகை வீடே வசதி. உங்கள் மாத வருமானத்தில் இஎம்ஐ தொகை 40 சதவீதத்திற்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்வது உங்கள் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும்.
சொந்த வீடு - முன்பணம்
இன்னொரு விஷயத்தையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.. சொந்த வீடு வாங்குவது என்பது வெறும் பணம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அது உங்கள் குடும்பத்தின் எதிர்கால கனவு. ஒருவேளை நீங்கள் இஎம்ஐ கட்ட முடிவு செய்தால், கையில் 20 சதவீத பணத்தை முன்பணமாக வைத்துக்கொண்டு களத்தில் இறங்குவது நல்லது. மீதமுள்ள 80 சதவீதத்தை மட்டும் கடனாகப் பெறும்போது வட்டி சுமை குறையும்.
அதேபோல், இன்சூரன்ஸ் போன்ற பாதுகாப்புகளைச் செய்து கொள்வது எதிர்பாராத சூழலில் உங்கள் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும். வாடகையோ அல்லது இஎம்ஐயோ, எதுவாக இருந்தாலும் உங்கள் மாத பட்ஜெட்டை பாதிக்காதவாறு திட்டமிடுவதே புத்திசாலித்தனமான அணுகுமுறை..
மொத்தத்தில், சொந்த வீடு என்பது ஒரு சென்டிமென்ட் மட்டுமல்ல, உங்கள் வருமானத்தைச் சரியாகக் கையாளும் ஒரு யுக்தியாகவும் இருக்க வேண்டும். சரியான நேரத்தில் எடுக்கும் முடிவே உங்களுக்கு நிம்மதியை தரும்..
-
சவரன் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டிய தங்கம்.. இப்போது அடகு வைப்பது புத்திசாலித்தனமா? ‘பவுன்’ கணக்கு இதோ -
தங்க பத்திர திட்டம்: 8 வருஷம் காத்திருந்தால் முழு வரி விலக்கு.. தங்கம் வாங்குபவர்களுக்கு டபுள் லாபம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications