பழைய கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்ய போறீங்களா? அந்த தப்பை மட்டும் செய்யாதீங்க.. வல்லுநர்கள் எச்சரிக்கை
சென்னை: இந்தக் காலத்தில் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்போம். அதில் நாம் முதலில் வாங்கிய கிரெடிட் கார்டில் பெரிதாக ஆஃபர் இல்லாமல் இருக்கலாம். அப்படி இருக்கும்போது ஏன் இத்தனை கார்டு என பழைய கிரெடிட் கார்டை நீங்கள் க்ளோஸ் செய்தால் அதுவே நீங்கள் செய்யும் பெரிய தவறு என எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்! இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் மாதச் சம்பளம் வாங்கும் அனைவரும் கிரெடிட் கார்டு யூஸ் செய்கிறார்கள். 45 நாட்கள் கழித்து பில் கட்டினால் போதும், ஈஸி இஎம்ஐ, ஆஃபர்கள் எனப் பல சலுகைகள் இருப்பதால் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தவே மக்கள் விரும்புகிறார்கள். மேலும், பலரும் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கிறார்கள்.

கிரெடிட் கார்டுகள்
இதுபோல பல கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும்போது, சில நேரம் நமக்கே குழப்பம் ஏற்படும். அதுபோன்ற சூழல்களில் எதாவது ஒரு கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்துவிடலாமா என்று கூட பலரும் நினைப்போம். அது நல்ல முடிவு தான். ஆனால், எந்த கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்கிறோம் என்பதே முக்கியம். பழைய கிரெடிட் கார்டில் ஆஃபர் குறைவு என அதை க்ளோஸ் செய்ய நினைத்தால் அதுவே பெரிய தவறாகப் போய் முடிந்துவிடும்.
ஏனென்றால் பழைய கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்தால், உங்கள் கிரெடிட் வரலாறு (Credit History) குறையும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் கணக்கிடும் காரணிகளில், கிரெடிட் வயது முக்கியப் பங்கு வகிக்கிறது. கிரெடிட் கார்டு பழையதாக இருந்தால் கிரெடிட் ஹிஸ்டரி நீண்டதாக இருக்கும். இது கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கக் காரணமாக இருக்கும். எனவே, ஆனால், பழைய கிரெடிட் கார்டை மூடினால் அது கிரெடிட் ஸ்கோர் குறையக் காரணமாக இருக்கும்.
என்ன நடக்கும்
இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "உங்கள் கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்யும்போது, கிரெடிட் ஹிஸ்டரி குறையும். இதனால் வரும் காலத்தில் கடன் வாங்கச் செல்லும்போது உங்கள் ஸ்டெபிலிட்டியை கணக்கிடுவதில் குழப்பம் ஏற்படும். புதிய, பயன்படுத்தப்படாத கிரெடிட் கார்டுகளை க்ளோஸ் செய்வதால் எந்தவொரு பிரச்சினையும் இருக்காது. ஆனால், நீண்ட காலமாக வைத்திருக்கும் கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்வது கிரெடிட் ஸ்கோர் குறையக் காரணமாக இருக்கும்" என்றார்.
இன்னொரு சிக்கல்
அதேபோல credit utilization கூட அதிகரிக்கும். அதாவது உங்களிடம் 3 கார்டு இருக்கிறது.. மூன்றிலும் தலா ஒரு லட்சம் லிமிட் என வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் உங்களின் மொத்த லிமிட் 3 லட்சம்.. நீங்கள் மாதம் ரூ.90 ஆயிரம் கிரெடிட் கார்டு மூலம் செலவிடுகிறீர்கள் என்றால் உங்களின் credit utilization 30%ஆக இருக்கும். ஏனென்றால் மூன்று கார்டிற்கும் சேர்த்து லிமிட் 3 லட்சமாக இருக்கிறது. அதேநேரம் ஒரு கார்டை க்ளோஸ் செய்தால் உங்கள் லிமிட் 2 லட்சமாகக் குறையும். அப்போது உங்கள் credit utilization 45%ஆக இருக்கும். இது 30%க்கு மேல் இருந்தாலே உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.
என்ன செய்யலாம்?
சரி, அப்போது என்ன செய்யலாம்.. கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்வதற்குப் பதிலாக வங்கியின் கஸ்டமர் கேருக்கு போன் செய்து அதை லைப்டைம் ப்ரீ கார்டாக மாற்றி தர சொல்லி கோரிக்கை விடுக்கலாம். இதுபோல கோரிக்கை விடுத்தால் நிச்சயம் லைப்டைம் ப்ரீயாக மாற்றிவிடுவார்கள் எனச் சொல்ல முடியாது. உங்களுக்கும் அந்த வங்கிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப், இதர கடன்கள், இதுவரை கிரெடிட் கார்டை எப்படிப் பயன்படுத்தியுள்ளீர்கள் என எல்லாவற்றையும் கணக்கிட்டு வங்கி முடிவெடுக்கும்.
ஒருவேளை உங்களுக்கு வாழ்நாள் இலவச கார்டாக மாற்ற வங்கி சம்மதித்தால், அதன் பிறகு நீங்கள் அதை க்ளோஸ் செய்யத் தேவையில்லை. கிரெடிட் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க, சில மாதங்களுக்கு ஒருமுறை சிறிய பரிவர்த்தனை செய்தாலே போதும். இதன் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோர் சரியாமல் பார்த்துக் கொள்ளலாம்.
அடுத்து என்ன நடக்கும்
வங்கி லைஃப்டைம் ப்ரீயாக மாற்றச் சம்மதிக்கவில்லை.. ஆண்டு கட்டணமே அதிகம் போகிறது என வேறு வழியில்லாமல் நீங்கள் கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்படிப் பழைய கிரெடிட் கார்டை நீங்கள் க்ளோஸ் செய்தால் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் தாக்கம் இருக்கும். ஆனால், அது குறுகிய காலத் தாக்கமாகவே இருக்கும். நீங்கள் தொடர்ந்து சரியான நேரத்தில் பில்களை முழுமையாகச் செலுத்தி, கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை 30% அல்லது அதற்கும் குறைவாக வைத்திருந்தால், சில மாதங்களில் கிரெடிட் ஸ்கோர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications