Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் வாங்கியவர்களுக்கு வாழ்நாளில் பார்க்காத சர்ப்ரைஸ்.. பலரும் அறிய வேண்டிய கணக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை 2020ம் ஆண்டு தங்கம் நீங்கள் 10 லட்சத்திற்கு வாங்கி போட்டிருந்தால் இன்று அப்படியே மூன்று மடங்கு லாபம் பார்த்திருக்க முடியும். அதாவது நீங்கள் ஒரு சவரன் 35 ஆயிரத்திற்கு வாங்கியிருந்தால் இன்று 1.15 லட்சம் கிடைத்திருக்கும். அதேபோல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் தங்கம் என்று அழைக்கப்படும் டிஜிட்டல் கோல்டு வாங்கியிருந்தால், ஆபரணத் தங்கத்தை விட மிக அதிக லாபம் கிடைத்திருக்கும் (ஏனெனில் இதில் செய்கூலி, சேதாரம் போன்ற இழப்புகள் இல்லை). 2020 பிப்ரவரியில் 5லட்சத்திற்கு டிஜிட்டல் தங்கம் வாங்கியிருந்தால், உங்கள் கையில் 18 லட்சம் கிடைத்திருக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். அதுபற்றி சற்று விரிவாகவே பார்ப்போம்.

பொருளதார நிபுணர்கள் இதுபற்றி கூறும் போது, பொதுவாக நம்மூரில் ஒரு பழமொழி சொல்வார்கள், "பொன் வச்ச இடத்துல பூ வைக்கலாம், ஆனா பூ வச்ச இடத்துல பொன் வைக்க முடியாது". இது எவ்வளவு உண்மை என்பது கடந்த 5 ஆண்டுகளில் தங்கம் விலை உயர்ந்துள்ள விதத்தைப் பார்த்த பலருக்கும் தெரிந்திருக்கும்.தங்கம் விலை இந்த அளவிற்கு உயரும் என்று யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

If you had bought gold for 5 lakhs in 2020 you would have received 18 lakhs in your hands today

இன்று மாதம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் சம்பளம் வாங்குபவர் கூட, வருமான வரி கட்டுபவர் கூட, நினைத்தாலும், ஒரு சவரன் தங்கத்தை ஒரு மாதத்தில் வாங்கி முடியாது. ஏனெனில் ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ஆக இருக்கிறது. வருமான வரி கட்டும் அரசு ஊழியரால் கூட தங்கத்தை எளிதாக இனி வாங்க முடியாத நிலைக்கு தங்கம் எட்டாத உயரத்திற்கு போய்விட்டது.

நீங்கள் 2020 பிப்ரவரியில், அதாவது கொரோனா ஊரடங்கு ஆரம்பிப்பதற்குச் சற்று முன்பு, ஒரு 5 லட்சம் ரூபாயைத் தங்கத்தில் (முக்கியமாக டிஜிட்டல் தங்கத்தில்) முதலீடு செய்திருந்தால், இன்று உங்கள் நிலைமை என்ன தெரியுமா? நீங்கள் கற்பனை செய்ய முடியாத லாபத்தை அடைந்திருப்பீர்கள். 2020ம் ஆண்டு யாரெல்லாம் டிஜிட்டல் கோல்டு வாங்கினார்களோ அவர்கள் எல்லாருமே இன்று லட்சாதிபதிகளாக மாறி இருப்பார்கள்.

2020 பிப்ரவரி நிலை என்ன

2020 பிப்ரவரியில், 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் வெறும் ₹4,150 லெவலில் தான் இருந்தது. அந்த 5 லட்சத்தை வைத்து நீங்கள் சுமார் 120.5 கிராம் தங்கம் வாங்கியிருக்க முடியும். அதாவது கணக்குப் பார்த்தால் சுமார் 15 சவரன் தங்கம் வாங்கியிருக்க முடியும்.

இப்போதைய நிலை (2026 பிப்ரவரி):

இன்று தங்கம் விலை ஏறியுள்ள வேகத்தைப் பார்த்தால் தலையே உங்களுக்கு நிச்சயம் சுற்றும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இன்று ஒரு கிராம் சுத்தத் தங்கம் சுமார் ₹15,500 வரை எகிறியுள்ளது. அன்று நீங்கள் வாங்கிய அதே 120.5 கிராம் தங்கத்தின் இன்றைய மதிப்பு: ₹18,67,750! உங்களுக்குக் கிடைத்துள்ள நிகர லாபம் மட்டும்: சுமார் ₹13,67,000! அதாவது உங்கள் பணம் 5 வருடத்தில் 273% வளர்ந்திருக்கும்.

ஏன் இந்த அசுர வளர்ச்சி?

கடந்த 5 ஆண்டுகளில் உலகம் சந்தித்த போர்கள் (இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனை, அமெரிக்கா சீனா வர்த்தக போர், உக்ரைன் ரஷ்யா போர், வளைகுடா பதற்றம் போன்றவை) மற்றும் பொருளாதார மாற்றங்களால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. வங்கியில் எஃப்டி (FD) போட்டாலோ அல்லது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தாலோ கூட இவ்வளவு பெரிய லாபம் கிடைத்திருக்குமா என்பது நிச்சயம் சந்தேகம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

டிஜிட்டல் தங்கத்தின் பலன் என்ன

ஆபரணத் தங்கமாக வாங்கியிருந்தால் செய்கூலி, சேதாரம் என ஒரு பெரிய தொகை போயிருக்கும். ஆனால் டிஜிட்டல் கோல்டில் அந்தத் தொல்லை இல்லை. விற்கும் போது ஜிஎஸ்டி போன்ற சிறிய வரிகள் கழிந்தது போக, உங்கள் கையில் சுமார் 18 லட்சம் ரூபாய் கம்பீரமாக வந்து சேர்ந்திருக்கும். அன்று ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதன் சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாய், இன்று ஒரு வீடோ அல்லது பெரிய நிலமோ வாங்கும் அளவிற்கு 18 லட்சமாக வளர்ந்து நிற்பதுதான் தங்கத்தின் மகிமை. 'தங்கம் எப்பவும் கையை விடாது' என்பதற்கு இதுதான் ஆகச்சிறந்த உதாரணமாக இருக்கிறது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

தங்கம் விலை எப்போது குறையும்

அதேநேரம் தங்கம் விலை பெரும் உச்சத்தில் உள்ள நிலையில், ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வந்து உலகின் சமாதானம் நிலவினால் தங்கம் விலை ஓரளவு குறையும். அதேபோல் அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தினாலும் தங்கம் விலை அதிரடியாக குறையும். அதேபோல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பழைய படி உயர்ந்தாலும் தங்கம் விலை குறையும். இதில் எது சாத்தியம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+