For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.10000 கோடி கணக்கில் வராத பணம் - கண்டுபிடித்த வருமான வரித்துறை

கடந்த நிதியாண்டில், 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கணக்கில் வராத வருமானத் தொகையை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த நிதியாண்டில், 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கணக்கில் வராத வருமானத் தொகையை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் கண்டுபிடிக்கப்பட்ட மதிப்பை விட கிட்டத்தட்ட 20 சதவிகிதம் அதிகமாகும்.

கடந்த 2017-18ம் நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளது. தனிநபர் மற்றும் நிறுவனங்கல் வருமான வரித்தாக்கல் செய்வதற்கான நடவடிக்ககைளை துரிதப்படுத்தி வருகின்றன. தனிநபர் பிரிவைச் சார்ந்தவர்கள் தற்போதே வருமான வரித்தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Income Tax Dept detects more than 10000 crore undisclosed Income last Financial year

மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே வருமான வரித்தாக்கலுக்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். சில நிறுவனங்கள் தற்போதே 2017-18ம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்துவிட்டனர். இவ்வாறு தாக்கல் செய்துள்ள வருமான வரி ரிட்டன்களில் சில நிறுவனங்கள் தங்களின் வெளிநாட்டு வருமானத்தை கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2017-18ம் நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளது. தனிநபர் மற்றும் நிறுவனங்கள் வருமான வரித்தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன. தனிநபர் பிரிவைச் சார்ந்தவர்கள் தற்போதே வருமான வரித்தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போதாக்குறைக்கு அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணையும் வங்கிக் கணக்குடன் இணைத்துவிட்டதால், வாடிக்கையாளர்களின் அனைத்து வங்கி நடவடிக்கைகளும் (வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் உட்பட) வருமான வரித்துறைக்கு கழுகுப்பார்வைக்கு சென்றுவிடுகின்றன. இதனை அறியாத சில நிறுவனங்களும் தனி நபர்களும் வழக்கம் போல தங்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்கு நடவடிக்கைகள் மற்றம் வருமானத்தையும் வருமான வரி ரிட்டனில் காட்டாமல் தப்பித்து விட்டதாக தப்புக் கணக்கு போட்டுவிட்டனர்.

வெளிநாட்டு வருமானம் மற்றும் கணக்குகளை முறையாக வருமான வரி ரிட்டனில் காட்டாமல் சுமார் 6000 நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து வருமான வரித் துறையின் உயரதிகாரி ஒருவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், நடப்பு நிதியாண்டில் 10,767 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத வருமானத் தொகையை வருமான வரிக்கான பொது இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளதாகவும், இது முந்தைய நிதியாண்டின் மதிப்பான 9,051 கோடி ரூபாயை விட அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.

பான் எண்ணைச் சாராத தகவல்கள், வெளிநாட்டுக் கணக்கு வரி இணக்கச் சட்டம், வாகனப் பரிமாற்றத் தகவல் மற்றும் பொது அறிக்கை தரநிலை போன்றவற்றைச் சரிபார்க்கையில் இத்தகையக் கணக்கில் வராத வருமானத் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித் துறையின் தகவலின்படி, நடப்பு நிதியாண்டில் வெளிநாட்டுக் கணக்கு வரி இணக்க வழக்குகள் கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், வெளிநாட்டுக் கணக்கு வரி இணக்கச் சட்டத்தின் (Foreign Account Tax Compliance Act) கீழ் கணக்கில் வராத வருமானத் தொகை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. பணமதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு வாகனப் பரிமாற்றம் மற்றும் பொது அறிக்கை தரநிலை வழக்குகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

English summary
The income tax department have detect more than 10000 crore undisclosed income on last financial year based on Non Pan Data and other sources. This amount is almost 20% higher than the amount detected in the 2016-17 financial year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X