For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் 6வது இடம் பிடித்த இந்தியா - சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?

உலகின் ஆறாவது பணக்கார நாடாக இந்தியா உள்ளதாக ஏஎஃப்ஆர் ஆசியா வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது. 8,23,000 கோடி டாலர் சொத்து மதிப்பு உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் 6வது இடம் பிடித்த இந்தியா-வீடியோ

    சென்னை: உலகின் முதல் பத்து செல்வச் செழிப்பு மிக்க நாடுகளைக் கண்டறிய ஏ.எஃப்.ஆர். ஆசிய வங்கி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வு தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதில்,

    இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கனடா, ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி இந்தியாவிற்கு 8,23,000 கோடி டாலர் சொத்து மதிப்பு உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின்படி அமெரிக்காவின் மொத்த சொத்து மதிப்பு 62,58,400 கோடி டாலராகும். இதற்கு அடுத்த இடங்களில் சீனா (24,80,300 கோடி டாலர்), ஜப்பான் (19,52,200 கோடி டாலர்) போன்றவை உள்ளன.

    ஏ.எஃப்.ஆர்.ஆசிய வங்கி மேற்கொண்ட ஆய்வில், நான்காவது இடத்தில் 9,919 பில்லியன் டாலர்களுடன் இங்கிலாந்தும், 9,660 பில்லியன் டாலர்களுடன் ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. 8,230 பில்லியன் டாலர்களுடன் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. கனடா (6,393 பில்லியன் டாலர்கள்), ஆஸ்திரேலியா (6,142 பில்லியன் டாலர்கள்), பிரான்ஸ் (6,649 பில்லியன் டாலர்கள்), இத்தாலி (4,276 பில்லியன் டாலர்கள்) உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு அடுத்த நிலையில் உள்ளன.

    இந்தியாவின் வளர்ச்சி

    இந்தியாவின் வளர்ச்சி

    கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் சொத்து மதிப்பீடு 200 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான தொழில் முதலீட்டாளர்கள், சிறந்த கல்விமுறை, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, மருத்துவத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றின் வளர்ச்சி காரணமாக இந்தியாவின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 2027ஆம் ஆண்டில் இந்தப் பட்டியலில் இந்தியா நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தைப் பிடிக்கும் என்றும், ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    கனடாவை முந்திய இந்தியா

    கனடாவை முந்திய இந்தியா

    2027ஆம் ஆண்டில் சீனாவின் சொத்துக்களின் மதிப்பு 69,449 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவின் சொத்து மதிப்பு 75,101 பில்லியன் டாலர்களாக இருக்கும்.

    அடுத்த 10 ஆண்டுகளில், ஆஸ்திரேலியா கனடாவை முந்தி, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ள இடத்திற்கு நிகராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலீடுகள் கணக்கெடுப்பு

    முதலீடுகள் கணக்கெடுப்பு

    ஒரு நாட்டிலுள்ள தனிநபர்கள் வைத்திருக்கும் சொத்துகள், மொத்த சொத்து மதிப்பை கணக்கிட எடுத்துக்கொள்ளப்பட்டன. நிலம், பணம், தொழில் அமைப்புகள், பங்கு சந்தை முதலீடுகள் போன்றவை சொத்துகளாக கருதப்பட்டு கடன் தொகை அதிலிருந்து கழிக்கப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    அரசாங்க உதவிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படவில்லை.

    உயரும் சொத்து மதிப்பு

    உயரும் சொத்து மதிப்பு

    உலகில் 5,84,000 கோடீஸ்வரர்கள் உள்ளார்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமும் சராசரியாக 1 கோடி டாலர் உள்ளது. உலகில் 2,252 பெரும் பணக்காரர்கள் உள்ளார்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமும் சராசரியாக 100 கோடி டாலர்

    உள்ளது என ஏஎஃப்ஆர் ஆசியா வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய சொத்துக்களின் மதிப்பு 50 சதவிகிதமாக உயரும். வேகமாக வளர்ந்துவரும் செல்வந்த சந்தைகளில் இலங்கை, இந்தியா, வியட்நாம், சீனா, மொரிஷியஸ் நாடுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றன எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கணக்கெடுப்பு

    கணக்கெடுப்பு

    கடந்த ஜனவரி மாதம் உலக பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு நிறுவனம் அறிக்கையை வெளியிட்டது. அந்த பட்டியலிலும் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது. அடுத்த இடத்தில் சீனா.

    ஜப்பான் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பிரிட்டன் 4வது இடத்திலும்,ஜெர்மனி 5வது இடத்தில் உள்ளது. பிரான்ஸ் இந்தியாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி நாடுகள் பெற்றுள்ளன.

    பத்து ஆண்டுகளுக்கு முன்பு

    பத்து ஆண்டுகளுக்கு முன்பு

    2017ஆம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 25 சதவிகிதம் வளர்ச்சிக் கண்டுள்ளது. 2016ஆம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 6,584 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஒரே ஆண்டில் 8,230 கோடியாக

    உயர்ந்துள்ளது. 2007ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 3,165 பில்லியன் டாலர்களாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 160 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவில் 3,30,400 பேர் 1 மில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்து வைத்திருக்கிறார்கள்.

    67 சதவிகித சொத்து

    67 சதவிகித சொத்து

    அமெரிக்காவில் 50,47,400 பேர் 1 மில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்து வைத்திருக்கின்றனர். இந்தியாவில் 20,730 கோடீஸ்வரர்கள் வசிக்கின்றனர். இந்தியாவுக்கு இந்தப் பட்டியலில் 7-வது இடம். ஒரு பில்லியன் அமெரிக்க

    டாலர்களுக்கு மேல் சொத்து வைத்திருக்கும் இந்தியர்கள் 119 பேர். தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சிக் கண்டுள்ளது. அதேவேளையில், இந்தியாவின் 67 சதவிகித சொத்து ஒரு சதவிகித இந்தியர்கள் வசமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    India has been ranked sixth in the list of wealthiest countries with total wealth of 8,23,000 crore dollar. According to the AfrAsia Bank Global Wealth Migration Review, the US is the wealthiest country
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X