For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1 குறைப்பு.. டீசல் விலை 50 பைசா அதிகரிப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. லிட்டருக்கு ரூ. 1.09 குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 2.50 குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Petrol Price Cut by Rs. 1.09/Litre, Diesel Hiked by 50 Paise

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 15 நாட்களாக பெட்ரோல் விலை குறைந்து காணப்பட்டதால் தற்போது விலையில் குறைப்புசெய்யப்பட்டுள்ளது. அதேசமயம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயி்ன் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.

இரண்டையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.09 குறைக்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த ஏப்ரல் 15ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசா குறைக்கப்பட்டது.

அதேபோல மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ. 2.50 குறைக்கப்பட்டுள்ளது.

English summary
Petrol prices have been reduced by Rs. 1.09, while diesel prices have been hiked by 50 paise. The new rates are effective midnight. "During the past fortnight, petrol prices have shown a downward trend while the INR-USD exchange rate has slightly depreciated. The combined impact of the two factors warrants a decrease in RSP(retail selling price) of MS (motor spirit) by Rs. 1.09/ litre at Delhi (inclusive of VAT) with corresponding decrease in other states." Indian Oil said in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X