பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25 குறைப்பு!
டெல்லி: பெட்ரோல் விலை ரூ.2.42-ம் டீசல் விலை ரூ.2.25-ம் குறைக்கப் பட்டுள்ளது. இதன்படி சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 58.96-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 16-ம் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42 குறைந்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25 குறைந்தது. அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் வரிவிதிப்புக்கு ஏற்ப விலை மாறுபடும்.
இதன்படி சென்னையில் இதுவரை ரூ.61.38-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், இனி 2 ரூபாய் 42 காசுகள் குறைந்து ரூ. 58.96-க்கு விற்பனையாகும்.
இதேபோல், ரூ.51.34-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல், இனி 2 ரூபாய் 25 காசுகள் குறைந்து இனி ரூ.49.09-க்கு விற்பனையாகும் என பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இன்று நள்ளிரவு முதல் இந்த புதிய விலை அமலுக்கு வரும்.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications