For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் காய்கறி விலை மீண்டும் உயர்வு – மழை காரணமாக காய்கறி வரத்து குறைவு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக மீண்டும் காய்கறி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து மட்டுமே அதிக அளவில் காய்கறிகள் வருகிறது. மழையின் காரணமாக உள்ளூர் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் விலை ஏறி உள்ளது.

Vegetable rates increased in Chennai…

முருங்கைகாய் இப்போது 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அவரைக்காய் கிலோ ரூபாய் 60க்கும் முட்டைகோஸ் கிலோ 25 க்கும் விலை உயர்ந்துள்ளது. 

தக்காளி ரூபாய் 20, கத்தரிக்காய் ரூபாய் 30, வெண்டைக்காய் ரூபாய் 35, கேரட் ரூபாய் 40, உருளை ரூபாய் 40, பீன்ஸ் ரூபாய் 40, நூல்கோல் ரூபாய் 40, சவ்சவ் ரூபாய் 30, பீட்ரூட் ரூபாய் 30, சேப்பங்கிழங்கு ரூபாய் 35, சேனை ரூபாய் 25, கருணைகிழங்கு ரூபாய் 40,கோவக்காய் ரூபாய் 35, கொத்தவரங்காய் ரூபாய் 30, பாகற்காய் ரூபாய் 40, புடலங்காய் ரூபாய் 35, சுரைக்காய் ரூபாய் 25, காளிபிளவர் ரூபாய் 50, பீர்க்கங்காய் ரூபாய் 35,வெங்காயம் ரூபாய் 25, சிறிய வெங்காயம் ரூபாய் 40, மிளகாய் ரூபாய் 30 க்கு விற்கப்படுகின்றது

இந்த காய்கறிகளின் விலையேற்றம் மக்களின் வயிற்றில் மீண்டும் புளியைக் கரைக்கத் தொடங்கி உள்ளது.

English summary
Vegetable rates increased again in Chennai. Veggie rates increased due to rainy season and decreased veggies cultivation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X