திருமணத்திற்கு இன்சூரன்ஸ்...என்னென்ன ரிஸ்க் கவரேஜ் இருக்கு தெரியுமா?
திருமண இன்சூரனஸ் திட்டம் திருமணத்திற்கு சில நாள்களுக்கு முன்பு தொடங்கி அந்த திருமணம் முழுமையாக முடிந்தவுடன் முடிந்துவிடுகிறது. இது நான்கு விதமான ரிஸ்க்குகளை கவர் செய்கிறது.
சென்னை: இயற்கை இடர்பாடுகள், மணமகனுக்கு அல்லது மணமகளுக்கு ஏற்படும் விபத்து, இரத்த உறவினர்களுக்கு ஏற்படும் விபத்து, நகை திருட்டு போய்விட்டால் திருமணம் தள்ளிப் போனால் அல்லது நின்று போனால் திருமண இன்சூரன்ஸ் பாலிசி இந்த இழப்பைச் சரி செய்கிறது.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்கின்றனர். ஆனால் இன்றைக்கு மேட்ரிமோனியல் சைட்டுகளில் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நிச்சயம் செய்யப்படுகின்றன. பத்திரிக்கை அடித்து மண்டபம் பேசி சொந்த பந்தங்களுக்கு அழைப்பு விடுத்து லட்சக்கணக்கில் செலவு செய்து நடைபெறும் திருமணங்கள் சில திடீர் நிகழ்வுகளினால் நின்று விடுகின்றன. இதனால் மன உளைச்சல் ஒரு பக்கம் இருக்க பொருளாதார ரீதியான இழப்பும் மற்றொரு பக்கம் ஏற்படுகிறது.

கோடிகளை செலவு செய்து திருமணம் செய்பவர்களும் இருக்கின்றனர். இந்த திருமணங்களுக்காகவும், திருமணம் நடைபெறும் போது ஏற்படும் பெறும் இழப்பை தவிர்ப்பதற்காகவும் திருமண இன்சூரன்ஸ் கடந்த சில ஆண்டுகாலமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள இந்த இன்சூரன்ஸ் பாலிசி இப்போது இந்தியாவிலும் பிரபலமடைந்து வருகிறது.
திருமணத் தேதிக்கு முன் 7 நாட்களில் இருந்து திருமணம் முடியும் வரை இயற்கை இடர்பாடுகள், மணமகனுக்கு அல்லது மணமகளுக்கு ஏற்படும் விபத்து, இரத்த உறவினர்களுக்கு ஏற்படும் விபத்து, திருமண விருந்து விஷமாகி உறவினர்கள் பாதிக்கப்படுதல், நகை திருடு போவதனால் திருமணம் நின்று போனாலும் இந்த திருமண இன்சூரன்ஸ் பாலிசி இந்த இழப்பை சரிசெய்யும்.
திருமணம் நடைபெறும் போது சொத்துக்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அல்லது திருமண விருந்து விஷமாகி அது விருந்தினர்களைப் பாதித்தால் அதற்கான இழைப்பையும் இந்த இன்சூரன்ஸ் பாலிசிகள் கவர் செய்யும் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில் மணப்பெண் அல்லது மணமகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணம் நின்று போனாலோ அல்லது இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு திருமணம் நின்று போனாலோ இந்த இன்சூரன்ஸ் பாலிசி கவர் ஆகாது என்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications