"இந்த" ஒரு விஷயத்தை மட்டும் பண்ணுங்க.. வாழ்க்கையில் காசு பிரச்சனை கண்டிப்பாக வராது! ரொம்ப ஈஸி தான்
சென்னை: இந்தக் காலத்தில் இளைஞர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை முறையாகக் கையாள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கவே செய்கிறது. இதனால் பெரும்பாலான இளைஞர்கள் நிதிச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அப்படி நீங்கள் எந்தவொரு நிதிப் பிரச்சினையிலும் மாட்டிவிடக்கூடாது என்றால் நீங்கள் பின்பற்ற வேண்டியது இந்த ஒரு ரூல்ஸ்ஸை மட்டும் தான்.. அதென்ன ரூல்ஸ்.. இது எந்தளவுக்கு முக்கியமானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
மாறி வரும் இந்த நவீனக் காலத்தில் இளைஞர்கள் பலரும் கை நிறையச் சம்பாதிக்கிறார்கள். இருப்பினும், பெரும்பாலான இளைஞர்களுக்கு மாதக் கடைசியில் பணமே இல்லாத ஒரு சூழலே இருக்கிறது. வருமானத்திற்கு ஏற்ப தங்கள் செலவுகளைச் செய்ய முடியாததே இதற்குக் காரணமாகும். இதனால் பல்வேறு இளைஞர்களும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்கள்.

ஒரே ரூல்ஸ்
அப்படி எந்தவொரு பிரச்சினையும் இருக்கவே கூடாது என்றால் நீங்கள் பின்பற்ற வேண்டியது 30:30:30:10 என்ற ரூல்ஸை தான். இது, உங்கள் வருவாயையும், ஓய்வூதியத் திட்டத்தையும் எப்படி நிர்வகிக்கலாம் என்ற ஐடியாவை உங்களுக்கு வழங்குகிறது. பட்ஜெட், முதலீடு, மற்றும் ஓய்வூதியக் காலத்தை எளிதாகக் கையாள இந்த விதி வழிகாட்டியாக இருக்கும்.
எதற்கு ஒதுக்க வேண்டும்
உங்களுக்கு வரும் சம்பளத்தில் முதல் 30% வருவாயை அத்தியாவசியத் தினசரி செலவுகளுக்கு ஒதுக்க வேண்டும்.. வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், மளிகைப் பொருட்கள், எரிபொருள் மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசியத் தேவைகளை இது பூர்த்தி செய்யும். வருமானம் முழுக்க செலவுக்குப் போனாலும் போதவில்லை என நீங்கள் சொன்னால் நீங்கள் வரவை தாண்டிச் செலவழிக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கை முறையைக் கொஞ்சம் மாற்றி செலவுகளைக் குறைக்கவும்! உங்கள் செலவுகள் இந்த 30% என்ற மேஜிக் நம்பரை தாண்டாமல் இருக்கப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்த 30% உங்கள் முதலீட்டிற்காக ஒதுக்க வேண்டும்.. நீங்கள் ஓய்வு பெற்ற எத்தனை காலம் இருக்கிறது என்பதைப் பொறுத்து முதலீடு செய்யுங்கள்.. பங்கு, கடன் பத்திரம், தங்கம் எனப் பல முதலீடு ஆப்ஷன்கள் உள்ளன. உங்கள் வயது, நெட் ஒர்த், உங்களுக்கு இருக்கும் கடமைகளைப் பொறுத்து முதலீடுகள் மாறுபடும்.!
30% ஓய்வுக்கு ஒதுக்க வேண்டும்
அடுத்த 30% தொகையை நீங்கள் ஓய்வுக் காலச் சேமிப்பிற்குப் பயன்படுத்த வேண்டும். நம்மில் பலரும் கோட்டை விடுவது இதில் தான். ஓய்வு பெறப் பல காலம் இருக்கிறது என நினைத்துக் கொண்டு அதற்கு எந்தவொரு செலவையும் செய்ய மாட்டோம். ஆனால், நீங்கள் கண்ணை மூடி திறப்பதற்கு ஓய்வுக் காலத்தை நெருங்கி இருப்பீர்கள். எனவே, எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ.. அவ்வளவு சீக்கிரம் ஓய்வுக்கான சேமிப்பை ஆரம்பிக்கவும்.
ஏற்கனவே 30% முதலீடு செய்கிறேனே.. இது எதற்குத் தனியாக என நீங்கள் கேட்கலாம். கூடுதல் சேமிப்பு எப்போதுமே நல்லதுதான். அதுவும் இந்தக் காலத்தில் பென்ஷன் கூட கிடைக்காது. எனவே, நாம் தான் எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும். வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்கள் இருந்தால் அதைக் கட்டவும் கூட நீங்கள் இதைப் பயன்படுத்தலாம்.
கடைசி 10% தொகை
கடைசி 10% தொகை எமர்ஜென்சிக்கு ஒதுக்க வேண்டும் என இந்த ரூல்ஸ் சொல்கிறது. எந்த வயதினராக இருந்தாலும், எதிர்பாராத நிதி சவால்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.. மருத்துவ எமர்ஜென்சி அல்லது வேலையிழப்பு போன்ற சூழ்நிலைகள் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். எனவே, இந்த 10% தொகையை அவசரத் தேவைகளுக்காக வைத்திருக்கவும்! இந்த எமர்ஜென்சி தொகையைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்! ஏனென்றால் அவசரக் காலத்தில் சந்தை இறங்கி இருந்தால் அது பயனே இல்லாமல் போய்விடும்.
இப்படித் திட்டமிட்டு செலவு செய்தால் உங்களுக்குப் பெரும்பாலான பிரச்சினைகள் வராது. இதில் இரு விஷயங்கள் தான் ரொம்பவே முக்கியம்.. முதலில் தேவையற்ற செலவுகளைச் செய்யக்கூடாது.. அடுத்து தொடர்ச்சியாகப் பணத்தைச் சேமிக்க வேண்டும். அந்த கன்சிஸ்டென்சியை எப்போதும் விட்டுவிடவே கூடாது!
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications