For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சில்லறை பணவீக்கம் 5.2% அதிகரிப்பு - மொத்த பணவீக்க விகிதம் 3.58% ஆக சரிவு

டிசம்பர் மாத சில்லறை பணவீக்க விகிதம் அதிகரித்த போதிலும் உற்பத்தி மற்றும் விளைச்சல் அதிகரிப்பால் கடந்த டிசம்பர் மாத மொத்த பணவீக்க விகிதம் 3.58 சதவிகிமாக சரிந்ததுள்ளது.

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 5.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. உற்பத்தி மற்றும் விளைச்சல் அதிகரிப்பால் கடந்த டிசம்பர் மாத மொத்த பணவீக்க விகிதம் 3.58 சதவிகிமாக சரிந்ததுள்ளது.

கடந்த வாரம் மத்திய ரிசர்வ் வங்கி சில்லறை பணவீக்க புள்ளி விவரத்தை வெளியிட்டது. அதில் சில்லறைப் பணவீக்க விகிதமானது கடந்த நவம்பர் மாதத்தில் 4.88 சதவிகிமாக இருந்தது. ஆனால், டிசம்பர் மாதத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவான 5.21 சதவிகிதத்தை எட்டியது.

இதற்கு காரணம் வட்டி விகிதத்தை மாற்றததே ஆகும். சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை அதிகரிப்பு மற்றும் 7வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளே வட்டி விகிதத்தை மாற்றதன் காரணமாகும்.

ஒட்டுமொத்த பணவீக்கம் சரிவு

ஒட்டுமொத்த பணவீக்கம் சரிவு

மத்திய வர்த்தக அமைச்சகம் டிசம்பர் மாதத்திய மொத்த பணவீக்க விகித புள்ளிவிவரத்தை இன்று வெளியிட்டது. அதில் கடந்த டிசம்பர் மாத மொத்த பணவீக்க விகிதம் 3.58 சதவிகிமாக குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது

பெரும்பாலான உணவுப் பொருட்களின் விலை வீழ்ச்சியே பணவீக்க விகிதம் சரியக் காரணமாகும்.

காய்கறிகள், பழங்கள்

காய்கறிகள், பழங்கள்

நவம்பர் மாதத்தில் 59.80 சதவிகிதமாக இருந்த காய்கறிகள் பணவீக்கம் டிசம்பரில் 56.46 சதவிகிதமாக சரிவடைந்தது. எனினும் வெங்காயம் மற்றும் பழங்கள் பணவீக்கம் முறையே 197.05 சதவிகிதம் 11.99 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மாமிச உணவுகளான முட்டை, சிக்கன், மட்டன், மீன் ஆகியவற்றின் பணவீக்கம் 1.67 சதவிகிதமாக குறைந்துள்ளது. எரிபொருட்கள் மற்றும் மின்துறை பணவீக்கம் 9.16 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

பயறுகள், பருப்புகள்

பயறுகள், பருப்புகள்

ஒட்டுமொத்த உணவுப் பொருட்களின் பணவீக்க விகிமானது கடந்த நவம்பர் மாதத்தில் 150.6 சதவிகிமாக இருந்தது. வடகிழக்கு பருவ மழை கை கொடுத்ததால் காய்கறிகள், பழங்கள், காஃபி தேயிலை, மற்றும், சோளம், பட்டாணி, உளுந்து போன்ற பயறு வகைகள், ஆகியவற்றின் விளைச்சல் அதிகரித்தது. மேலும், பிராய்லர் கோழி மற்றும் முட்டையின் உற்பத்தியும் அதிகரித்தது. இதனால் இவற்றின் விலை தடாலடியாக சரிந்தது இதன்காரணமாக ஒட்டுமொத்த உணவுப் பொருட்களின் பணவீக்க விகிமானது குறைந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 144.10 சதவிகிதமாக சரிந்தது.

2017 டிசம்பர் பணவீக்கம்

2017 டிசம்பர் பணவீக்கம்

ஒட்டுமொத்த உணவுப் பொருட்களின் பணவீக்க விகிதமானது கடந்த நவம்பர் மாதத்தில் 135.65 சதவிகிதமாக இருந்தது. ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் இது சுமார் 2.9 சதவிகிதம் குறைந்து 131.70 சதவிகிமாக சரிந்ததே ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் சரியக் காரணமாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாத பணவீக்க விகிதமானது 3.93 சதவிகிதமாக இருந்தது. ஆனால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்திய பணவீக்க விதித்துடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திய பணவீக்க விகிதம் சுமார் 1.48 சதவிகிதம் அதிகமாகும்.

பணவீக்கம் 5.21% அதிகரிப்பு

பணவீக்கம் 5.21% அதிகரிப்பு

கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 5.21சதவீதமாக அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 4.88 சத வீதமாக இருந்தது. உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தது, அரசு ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டது போன்ற காரணங்களால் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

மத்திய புள்ளியியல் அலுவலகம்

மத்திய புள்ளியியல் அலுவலகம்

2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கான உற்பத்தி துறை குறியீட்டையும் டிசம்பர் மாதத்துக்கான நுகர்வோர் விலை குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கத்தையும் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது. அதன்படி, நிறுவனங்கள் உற்பத்தி குறியீடு கடந்த நவம்பர் மாதத்தில் 8.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தக் குறியீடு 2.2 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி வட்டி விகித மாற்றம்

ரிசர்வ் வங்கி வட்டி விகித மாற்றம்

பணவீக்கத்தை பொறுத்தவரை தொடர்ச்சியாக 3 மாதங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் 3.58 சதவிகிதமாக பணவீக்கம் இருந்தது. பின்பு நவம்பர் மாதத்தில் 4.88 சதவிகிதமாக உயர்ந்தது. தற்போது டிசம்பர் மாதத்தில் 5.21 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Wholesale price index (WPI)based inflation unexpectedly slowed to 3.58% in December from 3.93% in the previous month because of a slower pace of growth in food prices.Data released by the Central Statistics Office (CSO) on Friday showed inflation, measured by the Consumer Price Index (CPI), accelerated to a 17-month high of 5.21% in December from 4.88% a month ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X