சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன இது.. ஒரு மாதிரி நிற்கிறாங்களே! நடுரோட்டில் தள்ளாடிய இளம்பெண்.. போதையில் மிதக்கும் பஞ்சாப்

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் சமீப நாட்களாக போதைப்பொருட்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது, போதையில் இளம்பெண் ஒருவர் சாலையில் நடக்க முயன்று நடக்க முடியாமல் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதனையடுத்து காவல்துறை போதைப்பொருளுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு அப்பொருட்களை விநியோகம் செய்த நபர்களை கைது செய்துள்ளனர்.

4 கிலோ.. ரூ.2 கோடி தங்க சட்டை.. உலகையே வியக்க வைத்த 4 கிலோ.. ரூ.2 கோடி தங்க சட்டை.. உலகையே வியக்க வைத்த

சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை

சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியின் மக்பூல்புரா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான வீடியோவில் இளம்பெண் ஒருவர் அதீத போதையில் நடக்க முடியாமல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் தள்ளாடியவாறு நின்றுகொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. மக்பூல்புரா சீக்கியர்களின் புனிதமான இடமாகும். ஆனால் அதே நேரத்தில் சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு பிரசித்தி பெற்ற இடமும் இதுதான்.

பலனளிக்காத முயற்சி

பலனளிக்காத முயற்சி

தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், இது போன்ற தொடர் சம்பவங்கள் இந்த பகுதியில் இயல்பாக நடைபெற்று வருகிறது என்பதுதான் பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த தொடர் குற்றச்சாட்டுகளையடுத்து அம்மாநில காவல்துறை போதை ஒழிப்பு இயக்கங்களை தொடங்கினர். ஆனால் இந்த இயக்கங்கள் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லையென சொல்லப்படுகிறது.

காவல்துறையினரின் ரெய்டு

காவல்துறையினரின் ரெய்டு

இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், மக்பூல்புரா காவல்துறையினர் இந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையில் சட்டவிரோத போதைப்பொருளை விற்பனை செய்ததாக 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 12 பேரை காவல்துறையினர் விசாரணைக்காக கைது செய்துள்ளது.

விசாரணை

விசாரணை

இப்படியான சட்டவிரோத போதைப்பொருள் பெரும்பாலும் திருடப்பட்ட வாகனங்களில்தான் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே வாகன சோதனையிலும் 5 திருட்டு வாகனங்களை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளார். மக்பூல்புரா பகுதியை உள்ளடக்கிய அமிர்தசரஸ் கிழக்கு சட்டமன்ற தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜீவன்ஜோத் கவுர் இது குறித்து கூறுகையில், "இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
In recent days, there have been reports that the use of drugs has been increasing in the state of Punjab. In this case, a video of an intoxicated young woman trying to walk on the road but not being able to walk is being shared on social media. After this, the police engaged in intensive search and hunt against drugs and arrested the persons who distributed the drugs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X