சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிளாஸ் ரூமிலேயே.. அதுவும் ஜன்னலுக்கு பக்கத்தில்.. காலை டேபிளில் போட்டு.. பபிதா டீச்சர் செய்த காரியம்

கிளாஸ் ரூமில் மாணவியை விசிறிவிட சொல்லி ஆசிரியர் தூங்கி உள்ளார்

Google Oneindia Tamil News

சண்டிகர்: 2 நாட்களாகவே ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இப்படி ஒரு அட்டகாசம் நடந்திருக்கிறது.. ஆனால், அதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாதது, மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

பீகார் மாநிலத்தில், மேற்கு சாம்பரன் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அங்கு பஹாஹி புரைனா என்ற கிராமம் உள்ளது.. இங்கு கடர்வா என்ற அரசு ஆரம்ப பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

2 மேட்டர்.. அஸ்திரத்தை எடுத்த பாஜக.. காரணமே 2 மேட்டர்.. அஸ்திரத்தை எடுத்த பாஜக.. காரணமே

கடந்த சனிக்கிழமையன்றும் பள்ளி வழக்கம்போல் இயங்கி வந்துள்ளது.. அப்போது இந்த பள்ளியின் டீச்சர் ஒருவர் கிளாஸ் ரூமில் தூங்கிவிட்டார்.. இதுதான் வீடியோவாக வெளிவந்துள்ளது.

 கிளாஸ் ரூம்

கிளாஸ் ரூம்

அந்த டீச்சர் பெயர் பபிதா குமாரி.. கிளாஸ் ரூமில் பட்டப்பகலில், மாணவர்கள் உட்கார்ந்திருந்தபோதே, சேரை இழுத்து ஜன்னல் ஓரமாக போட்டுக் கொண்டு படுத்துவிட்டார்.. காலை தூக்கி எதிரே இருந்த டேபிள் மீது வைத்துகொண்டு, சேரில் சாய்ந்து தூங்கி கொண்டிருக்கிறார்.. ஒருவேளை, ஜன்னல் ஓரம் படுத்தும் காற்று வராமல்போய், எங்கே தூக்கம் கலைந்து விடுமோ என்று நினைத்து, தூங்குவதற்கு முன்பே தன் வகுப்பில் உள்ள மாணவியை தனக்கு விசிறி விட சொல்லிவிட்டு படுத்துள்ளார்.

 விசிறி - மாணவி

விசிறி - மாணவி

இதற்காக அந்த மாணவியிடம் விசிறியையும் எடுத்து தந்துள்ளார்.. அந்த மாணவியும் விசிறிவிட, டீச்சரும் நன்றாக குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கிறார்.. மற்ற மாணவிகள், தரையில் உட்கார்ந்துள்ளனர்.. இதை அந்த கிளாஸ் பிள்ளைகளே, வீடியோ எடுத்ததுகூட டீச்சருக்கு தெரியவில்லை.. அந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் #bihareducation என்ற ஹேஷ்டாக்கிலும் பதிவிடப்பட்டு விட்டது.. இதை பார்த்த மற்ற மாணவர்களும், பெற்றோர்களும் அதிர்ந்து போனார்கள்.

 டீச்சர் தூக்கம்

டீச்சர் தூக்கம்

பிள்ளைகளுக்கு பாடம் நடத்தாமல் இப்படி தூங்கினால் எப்படி? என்று பபிதா குமாரியிடம் இது குறித்து கேட்டனர்.. அதற்கு அவர், "எனக்கு உடம்பு சரியில்லை.. அதனால்தான் தூங்கிட்டேன்" என்று கூலாக பதில் சொல்லி உள்ளார்.. இந்த பதிலை கேட்டு, இணையவாசிகள் கோபத்தையும் வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். பொதுவாக இப்படி மாணவர்கள்தான் கிளாசில் தூங்குவார்கள்? இப்படியா ஒரு டீச்சர் தூங்குவது? இவங்களே இப்படி இருந்தால், மாணவர்களுக்கு நல்ல கல்வியை யார் தருவது? என்று கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றனர்.

 புதிய ஒயின்

புதிய ஒயின்

அதுமட்டுமல்ல, "இந்த வீடியோ வெளியாகி 2 நாட்களாகிறது.. ஆனால், பள்ளியின் நிர்வாகம் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்? பபிதா குமாரியை உடனே சஸ்பெண்ட் செய்யுங்கள் என்று ஆதங்க கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.. மேலும் ஒருசிலர், நிதிஷ்குமார் பதவியேற்ற பிறகும், மாநில நிலைமை இப்படித்தான் இருக்கிறது. "பழைய பாட்டிலில் புதிய ஒயின்" என்று விமர்சித்து வருகிறார்கள்.

டீச்சருக்கு சப்போர்ட்

டீச்சருக்கு சப்போர்ட்

கடந்த 2 நாட்களாகவே, இன்ஸ்டாகிராமில் 'பாட்பீகார்கி' பக்கத்தில் பகிரப்பட்டு, பலரால் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது.. பலரும் டீச்சரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.. ஆனால் வெகு சிலரோ, டீச்சருக்கு சப்போர்ட் செய்துள்ளனர்.. ஆசிரியைகளின் அசௌகரியங்களை யாருமே அறிவது இல்லை? இந்த ஆசிரியருக்கு உண்மையிலேயே என்ன உடல்நலக்கோளாறோ தெரியாது.. அதை அறியாமல் சகட்டுமேனிக்கு விமர்சிக்க கூடாது என்றும் பதிவிட்டு வருகின்றனர்..

வீடியோ

வீடியோ

உடல்நலக்குறைவு என்றாலும், அதற்கு வகுப்பறைதான் கிடைத்ததா? மாணவியை இப்படி கைவிசிறியால் வீச செய்வதா என்றும் பதில் கேள்வி கேட்டுள்ளனர்.. இந்த வீடியோவை எடுப்பவர், அந்த தொடக்கப் பள்ளியின் பெயரை காட்ட முயற்சி செய்கிறார்... அப்போதுதான், ராஜ்கியாக்ரித் பிராத்மிக் வித்யாலா பள்ளி என்று பெயர்ப்பலகை தெரிகிறது.. ஆனால், இதுகுறித்து வெளியாகி இருக்கும் மற்றொரு செய்தி குறிப்பில், இந்த சம்பவம் மேற்கு சம்பாரன் மாவட்டத்தின் பாகை புரைனா கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் நடந்ததாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது...

பபிதா டீச்சர்

பபிதா டீச்சர்


இப்படித்தான், கடந்த மே மாதம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் திடீரென கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.. அப்போது ஒரு கிளாஸ் ரூமுக்குள் நுழைந்தபோது, அந்த ஆசிரியர் தூங்கி கொண்டிருந்தார்.. மாணவர்கள் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தனர்.. பிறகு, தூங்கிக்கொண்டிருந்த ஆசிரியரை, அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள்தான் தட்டி எழுப்பினர் குறிப்பிடத்தக்கது... எப்படி பார்த்தாலும் இந்த பபிதா டீச்சர் செய்தது தவறு என்றுதான் பெரும்பாலானோர் தெரிவித்து வருகின்றனர்.

English summary
class student fans teacher as she takes nap in classroom and what happened in bihar கிளாஸ் ரூமில் மாணவியை விசிறிவிட சொல்லி ஆசிரியர் தூங்கி உள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X