மணிப்பூர் போல.. ஹரியானாவிலும் நாளை வரை இணைய சேவை முடக்கம்- கல்வி நிறுவனங்கள் மூடல்!
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பேரணியால் ஏற்பட்ட பெரும் வன்முறையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மணிப்பூர் மாநிலம் போல ஹரியானாவிலும் இணைய சேவை முடக்கப்பட்டுளது. ஹரியானாவில் கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 3 மாதங்களாக மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையே வன்முறை தொடருகிறது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் முடங்கி இருக்கிறது. இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உச்சநீதிமன்றமும் மணிப்பூரில் அமைதி திரும்பாமல் இருப்பதற்கு கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

தற்போது தலைநகர் டெல்லியை ஒட்டிய ஹரியானா மாநிலமும் வன்முறை பூமியாகி இருக்கிறது. ஹரியானாவில் இந்துத்துவா அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய பேரணியால் அங்கு வன்முறை வெடித்தது. ஹரியானாவின் குருகிராம் நூ பகுதியில் இப்பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணிக்கு எதிராக ஒரு கும்பல் கல்வீசித் தாக்குதல் நடத்தியது. இதனால் மிகப் பெரும் மோதல் ஏற்பட்டது. மோதல்களைத் தடுக்க போலீசார் தடியடி நடத்தினர்; துப்பாக்கிச் சூடு நடத்தினர். இம்மோதல்களில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஹரியனா மாநிலம் நூ பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நாளை வரை இணைய சேவை இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளன. அதேபோல கல்வி நிறுவனங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதங்களாக இணையசேவை முடக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற தலையீட்டுக்குப் பின்னர் பகுதி அளவுதான் தற்போது இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதே போல ஹரியானாவிலும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications