வீடியோ: கச்சா பாதாம் பாடலுக்கு நடனமாடும் கெஜ்ரிவால் - பகவந்த் மான்..ஆம் ஆத்மியின் வெற்றி கொண்டாட்டம்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முதன் முறையாக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இதை கொண்டாடும் விதமாக கச்சா பாதாம் பாடலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நடனமாடும் வீடியோவை தயார் செய்துள்ளார்கள் பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியினர்.
பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநிலத்தில் நடந்துமுடிந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.
இதில் பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து நீக்கி, ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.

பஞ்சாப்
117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. 2017 தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்டு 20 தொகுதிகளை வென்றது. ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிந்து, ஆம் ஆத்மி சட்டசபை செல்ல இருக்கிறது.

ஆம் ஆத்மி
பகவந்த் மான் முதல்வர் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டது முதல், ஆம் ஆத்மி
தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. பகவந்த் மான் எளிமையான பேச்சு, டெல்லியில் கெஜ்ரிவாலுக்கு இருந்த பெயர், விவசாயிகள் போராட்டம் இதெல்லாம் சேர்ந்து வாக்குகளாக ஆம் ஆத்மிக்கு சென்றது.

வெற்றி
ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் மட்டும் ஆட்சி செய்து வந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்திலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோர் கச்சா பதாம் பாடலுக்கு நடனமாடுவது போன்று பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

கச்சா பாதாம்
கச்சா பாதாம் பாடல், இந்தியா தாண்டி உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இந்த வீடியோவை அனிமேட் செய்து வெள்ளியிட்டிருக்கிறது பஞ்சாப் ஆம் ஆத்மி. அதே வீடியோவில் இவர்கள் நடனமாடுவது போலவும், ராகுல் காந்தி மற்றும் சித்து சோகமாக பார்ப்பது போலவும் அனிமேட் செய்யப்பட்டுள்ளது. இதை பலரும் ரசித்து வருகிறார்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications