சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டின் விடுதலைக்காக அந்தமான் சிறையில் ஆயுள் கைதியான பஞ்சாபின் நாயகன் - யார் இவர்? முழு விவரம்

Google Oneindia Tamil News

சண்டிகர்:பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸிருந்து சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த 'லால் சிங் பத்ரி' குறித்து 'ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்' இணையதளத்தில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்காக உழைத்தவர்களை சிறப்பிக்கும் வகையில் 'ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்' எனும் கொண்டாட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ் இணையதளத்தில் சுதந்திரப்போராட்டத்தில் பங்கெடுத்தவர்களின் தியாகங்களை மத்திய அரசு தொடர்ந்து எழுதி வருகிறது.

எதிர்வரும் 15ம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்தவர்களை சிறப்பிக்கும் வகையில் 'ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்' எனும் கொண்டாட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸிருந்து சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த லால் சிங் பத்ரி குறித்து ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ் இணையதளத்தில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுதந்திரத்திற்காக பல்லாயிரக்கணக்கானோர் போராடிய நிலையில், ஒரு சில குறிப்பிட்ட நபர்களை மட்டுமே நாம் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் இதில் கவனிக்கப்படாது விடப்பட்டவர்களை சிறப்பிக்கும் விதமாக 'ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்' இணையதளத்தில் வீரர்களின் தியாகம் எழுதப்பட்டு வருகிறது.

 Punjabs hero, a life prisoner in Andaman Jail for the liberation of the country - who is he? Full details

அமிர்தசரஸ் மாவட்டம் பத்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாபா லால் சிங். அவரது தந்தை சுசேத் சிங் ஒரு நடுத்தர வர்க்க விவசாயி. இவர் பஞ்சாபின் மஜா பகுதியில் கதர் கட்சியின் புரட்சிகர நடவடிக்கைகளில் பங்கேற்றவராவார். அவரைத் தொடர்ந்து அவரது மகனும் இந்த கட்சியில் தீவிரமாக பணியாற்றி சுதந்திரத்திற்காக போராடி ஆயுள் தண்டனை பெற்று அந்தமான் நிகோபார் சிறையில் தன் வாழ்கையை கழித்தார். இந்த கதர் கட்சிக்கு ஒரு பின்னணி உண்டு. அதாவது, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த இந்தியர்கள் அங்கிருந்தபடியே ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலைக்கு உதவிடும் நோக்கில் பல அமைப்புகளை உருவாக்கினர். அவற்றில் ஒன்று கதர் இயக்கமாகும். பின்னாளில் இது கட்சியாக வளர்ந்தது.

இந்த கட்சி குறித்து குருத்துவாராவின் நாதா சிங் மற்றும் போக் சிங் ஆகியோர் லால் சிங்கின் தந்தையான சுசேத் சிங்கிடம் கூறியுள்ளனர். பின்னர் அதன்பால் ஈர்க்கப்பட்ட சுதேத்சிங், கட்சியில் செயல்படத் தொடங்கினார். இவருக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தை சுதேதசிங் அடிக்கடி கூட்டினார். இதன் மூலம் லால் சிங் பூரே, நிதன் சிங், குஜ்ஜர் சிங் மற்றும் பிற முக்கிய கட்சி செயல்பாட்டாளர்கள் குருத்துவாராவிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

இப்படியாக சென்றுகொண்டிருக்கையில் 1915 மார்ச் 21ம் தேதியன்று பிரிட்டிஷ் காவல்துறை திடீரென கட்சியின் முக்கிய செயற்பாட்டாளரான லால் சிங் பூரே என்பவரை கைது செய்தது. இது எப்படி நடந்தது என யாருக்கும் தெரியவில்லை. பின்னர் விசாரித்ததில், கபூர் சிங் என்பவரிடம் காவல்துறை பேரம் பேசி பணம் கொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கபூர் சிங், லால் சிங் இருக்கும் இடத்தை காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து இது போன்று இனி தைரியம் யாருக்கும் வரக்கூடாது என கபூர் சிங்கை தண்டிக்க கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் முடிவு செய்கின்றனர். இதன் அடிப்படையில், ஹர்தித் சிங் மற்றும் பிரேம் சிங் சுர் சிங் ஆகியோருடன் லால் சிங் பத்ரி, இந்தர் சிங் உள்ளிட்டோர் கபூர் சிங் பதுங்கி இருந்த கிராமத்திற்கு வருகின்றனர். பின்னர் கபூர் சிங்கை அவர்கள் படுகொலை செய்கின்றனர். இதனையடுத்து இந்த கட்சியில் பங்கேற்று விடுதலைக்கு போராடிய சுசேத் சிங்கின் மகனும் துடிப்பு மிக்க இளைஞனுமான லால் சிங் பத்ரி கைது செய்யப்படுகிறார். அவர் மீது கொலை வழக்கு பிரிவுகள் 302, 395, 109, மற்றும் 120-பி ஆகியவை பதியப்படுகிறது. பின்னர் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட டிஆர்.கிருஷ்ணசாமி - யார் இவர்? முழு விவரம் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட டிஆர்.கிருஷ்ணசாமி - யார் இவர்? முழு விவரம்

English summary
(சுதந்திரத்திற்காக போராடி ஆயுள் தண்டனை பெற்ற லால் சிங்): 'Lal Singh Badri', who participated in the freedom struggle from Amritsar, Punjab, has been featured on the 'Azadi Ka Amrut Mahotsav' website. The central government is planning to organize a celebration called 'Azadi Ka Amruth Mahotsav' to honor those who worked for freedom.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X