'வரமாட்டோம்'.. 3 வருடமாக வீட்டுக்குள்ளேயே பூட்டிக்கொண்டு வாழ்ந்த தாய் - மகன்.. கதவை உடைத்த போலீஸ்
கணவர் சுஜன் மாஜி அலுவலகத்திற்கு செல்வதை மனைவி முன்முன் சுத்தமாக ஏற்றுக்கொள்ளவில்லை.
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் கொரோனா தொற்றுக்கு பயந்து தனது 10 வயது மகனுடன் 3 ஆண்டுகள் வீட்டிற்குள் பூட்டிக்கொண்டு வெளிவராமல் இருந்த தாயை காவல்துறையினர் தற்போது மீட்டிருக்கின்றனர். இதனையடுத்து தாயும் மகனும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தின் குருகிராம் பகுதியில் சுஜன் மாஜி-முன்முன் மாஜி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். வழக்கம்போல குடும்பம் அன்றாட சவால்களை எதிர்கொண்டு வந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்தியாவில் 2020ம் ஆண்டு தொற்று பாதிப்பு உச்சக்கட்டத்தை ஏற்படுத்தியது.
உயிரிழப்புகளும், மருத்துவமனையின் வாசல்களில் வரிசைக்கட்டி நின்ற ஆம்புலன்ஸ்களில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களின் காட்சிகளும் கொரோனா தொற்று குறித்த அச்சத்தை அதிகரிக்க செய்தது. 2021ம் அண்டு தொற்று பாதிப்பு ஓரளவு குறைய தொடங்கியது. எனவே தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. எனவே கணவர் சுஜன் மாஜி அலுவலகத்திற்கு செல்ல ஆயத்தமாகியுள்ளார். ஆனால் இதற்கு மனைவி முன்முன் மாஜி ஒப்புக்கொள்ளவில்லை.

கொரோனா தொற்று
சுஜன் இதனை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அவ்வளவுதான் சண்டைக்கான புள்ளி விழுந்துவிட்டது. அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த சுஜனை மனைவி முன்முன் வீட்டில் சேர்க்கவில்லை. சுஜன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மும்முன் கேட்கவில்லை. "நம்முடைய வீட்டில் குழந்தை இருக்கிறது, நீங்கள் ஆபிஸ் போயிட்டு அங்கிருந்த கொரோனாவை இங்க கொண்டுவந்து நம்ம புள்ள மேல விட்டுட்டா என்ன பண்றது? எனவே வெளியவே இருங்க" என்று முன்முன் கூற சரி ஏதே ஒரு நாள்தானே என நினைத்து சுஜன் தனது நண்பர்கள் வீட்டில் தங்கியுள்ளார்.

வேறு வீடு
ஆனால் அடுத்த நாளும் மனைவி முன்முன் அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இப்படியே ஓரிரு நாட்கள் வரை சென்றிருக்கிறது. தன்னுடைய உதவியில்லாமல் மனைவியும் மகனும் எப்படி உயிர் வாழ்வார்கள் என்று பயந்த சுஜன் தினமும் காய்கரி, பால் இதர மளிகை பொருட்களை வாங்கி கொண்டு கதவருகே வைத்துவிட்டு வந்துவிடுவார். மனைவி முன்முன் இந்த பொருட்களை எடுத்துக்கொண்டு பயன்படுத்தி வந்தார். நாட்கள் மெல்ல சென்றன. ஒரு கட்டத்திற்கு மேல் நன்பர்கள் வீட்டில் வசிக்க முடியாத நிலை உருவானது. எனவே சுஜன் தனது வீட்டிற்கு பக்கத்திலேயே வேறு ஒரு வீடு எடுத்துக்கொண்டு தங்க தொடங்கிவிட்டார்.

படிப்பு
அங்கிருந்து தனது சொந்த வீட்டின் கரண்ட் பில், செல்போன் பில் என அனைத்தையும் கட்டி வந்துள்ளார். சமையல் கேஸ் சிலிண்டர் தீர்ந்து போனதையடுத்து புதிய சிலிண்டரை சுஜன் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அதனை முன்முன் பெறவில்லை. சிலிண்டர் மூலம் வைரஸ் பரவிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து வேண்டாம் என்று கூறியுள்ளார். இதற்கு மாற்றாக மின்சார அடுப்பை பயன்படுத்தி வந்துள்ளார். சுஜன் தனது மகனிடம் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டால் வீடியோ காலில் பேசிக்கொள்ளலாம். அதேபோல மகனின் படிப்பு ஆன்லைன் வகுப்பில் தொடர்ந்தது.

தற்கொலை முயற்சி
இதையெல்லாம் பார்த்து ஒரு கட்டத்தில் கடுப்பான தந்தை சுஜன் காவல் நிலையத்தை அணுகியுள்ளார். முதலில் காவல்துறையினர் இந்த புகாரை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. பின்னர் குடும்ப நலத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசியுள்ளனர். இதனையடுத்து குழந்தையையும், மனைவியையும் மீட்க அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டிற்கு வந்த காவல்துறையினர் கதவை திறக்க சொல்லி கூறியுள்ளனர். ஆனால் கதவை திறக்க மறுத்த முன்முன், தங்களை கட்டாயப்படுத்தினால் குழந்தையை கொன்றவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.

காவல்துறை அதிரடி
இதனை எதிர்பார்க்காத அதிகாரிகள் தங்கள் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து திரும்பினர். இதனையடுத்து மீண்டும் திட்டமிட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். அப்போது திடீரென கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று குழந்தையையும், தாயையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். தற்போது இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கு பயந்து மகனுடன் தாய் ஒருவர் 3 ஆண்டுகளாக விட்டுக்குள் அடைந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications