"கரெண்ட்.." சிஎம் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் நீக்கம் ஏன் தெரியுமா? ராகுல் காந்தி பரபர விளக்கம்
சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை நீக்கியதற்கான காரணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் கேப்டன் அமரீந்தர் சிங். இவருக்கும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அமரீந்தர் சிங் பதவி விலகினார்.
அதையடுத்து, பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார் கேப்டன் அமரீந்தர் சிங். பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் கேப்டன் அமரீந்தர் சிங்.

ராகுல் காந்தி
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்தார் ராகுல் காந்தி. இதனால் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அதிருப்தியடைந்தார்.

அமரீந்தர் சிங்
இந்நிலையில், பஞ்சாப் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பேசுகையில், ''பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர் சிங் ஏன் நீக்கப்பட்டார் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்க ஒப்புக் கொள்ளாததால் தான் அவர் நீக்கப்பட்டார். மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுடன் எனக்கு ஒப்பந்தம் உள்ளது, அதனால் இலவச மின்சாரம் வழங்க முடியாது என்று அமரீந்தர் சிங் தெரிவித்தார்'' என்று ராகுல் காந்தி
தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி
அமரீந்தர் சிங் நீக்கப்பட்டதற்கு பிரியங்கா காந்தியும் விளக்கம் கொடுத்துள்ளார். ''பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் 5 ஆண்டு கால ஆட்சி நிலவியது. டெல்லியில் இருந்து பஞ்சாப் காங்கிரஸ் அரசை சில காலம் பாஜக இயக்கி வந்தது. இந்த ரகசிய கூட்டணி தற்போது பொதுவெளிக்கு வந்துவிட்டது. அதனால் அமரீந்தர் சிங்கை மாற்ற வேண்டியதாகியது'' என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பிரனீத் கௌர்
கேப்டன் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கௌர். இவர் பாட்டியாலா மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. இவர் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறார். பாட்டியாலாவில் கணவருக்கு எதிராக பிரசாரம் செய்ய பிரனீத் கெளரை காங்கிரஸ் அழைத்தது. ஆனால், அவர் பிரசாரம் செய்ய மறுத்துவிட்டார். 'நான் எனது குடும்பத்துடன் இருக்கிறேன். குடும்பமே எல்லாவற்றிற்கும் மேலானது' என்று செய்தியாளர்களிடம் பிரனீத் கெளர் கூறியுள்ளார். விரைவில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவார் என்று தெரியவந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications