சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஜாக்பாட்".. மெகா திட்டத்தை தொடங்க போகும் தமிழ்நாடு அரசு? உதயநிதி அறிவிக்க போகிறாராமே.. குஷி செய்தி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவில் முக்கியமான தேர்தல் வாக்குறுதி ஒன்றை நிறைவேற்ற போவதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

கடந்த பட்ஜெட்டிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.

ஜெயலலிதாவை பிரதமர் மோடி கொலை செய்தார் என திமுக எம்எல்ஏ பேசுவதா? பாஜக அமைதியாகவே இருக்காதாம்:அண்ணாமலை ஜெயலலிதாவை பிரதமர் மோடி கொலை செய்தார் என திமுக எம்எல்ஏ பேசுவதா? பாஜக அமைதியாகவே இருக்காதாம்:அண்ணாமலை

 வாக்குறுதி

வாக்குறுதி

திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. முக்கியமாக தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் சரியாகவில்லை என்ற காரணத்திற்காக இந்த திட்டம் தொடங்கப்படாமல் உள்ளது. இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். நான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து மாற மாட்டேன். கண்டிப்பாக எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன். மக்களுக்கு கண்டிப்பாக மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். இதில் மாற்றம் இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

ஆலோசனை

ஆலோசனை

இந்த நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு 25800 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். இந்த நிலையில்தான் சில மாற்றங்களுடன் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் PHH-AYY, PHH, NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

உரிமைத்தொகை

உரிமைத்தொகை

NPHH -S, NPHH - NS ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படுவது தொடர்பாக சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில், இந்த உரிமை தொகையை வரும் மார்ச் 8ம் தேதி.. அதாவது சர்வதேச மகளிர் தினத்தில் இருந்து வழங்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்க உள்ளன.

பெண்கள்

பெண்கள்

ஏற்கனவே பெண்களுக்கு அளிக்கப்படும் கட்டணமில்லா பேருந்து காரணமாக பெண்கள் இடையே திமுகவிற்கு மதிப்பு உள்ளது. தற்போது இந்த திட்டத்தையும் செயல்படுத்தி பெண்களை மொத்தமாக கவரும் விதமாக திட்டத்தை ஆரம்பிக்க அரசு முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன் திட்டத்தை கொண்டு வந்தால் அரசியல் ரீதியாகவும் பெரிய அளவில் அது பலன் அளிக்கும் என்று திமுக தரப்பு நினைக்கிறதாம். பெரிய விழா எடுக்கப்பட்டு இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். தமிழ்நாடு அமைச்சராக கடந்த வாரம் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். முன்னதாக முதல்வர் ஸ்டாலினிடம் பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வனப் பணி, மற்ற அகில இந்தியபணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புமுயற்சிகள், சிறப்புத்திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன் ஆகிய துறைகள் இருந்தன. இதில் சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை முதல்வரிடம் இருந்தது. இந்த துறைதான் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

 உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

பல்வேறு துறைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. துறை ரீதியான அறிவிப்பு இல்லாமல், ஒவ்வொரு துறையிலும் சில சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும். முதல்வர்தான் இந்த சிறப்பு திட்டங்களை அறிவித்து வந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் கைக்கு இந்த துறை சென்றுள்ளது. இந்த துறையை வைத்து இருக்கும் அமைச்சர்.. எந்த துறைக்கு கீழ் வேண்டுமானாலும் நலத்திட்டங்களை அறிவிக்க முடியும். உதாரணமாக கல்வித்துறை அமைச்சர் போக்குவரத்து துறையில் அறிவிப்புகளை வெளியிட முடியாது. ஆனால் இந்த சிறப்பு திட்ட செயலாக்க துறையை கையில் வைத்து இருக்கும் அமைச்சர் எந்த துறையில் வேண்டுமானாலும் சிறப்பு திட்டங்கள் என்ற பெயரில் அறிவிப்புகளை வெளியிட முடியும். மற்ற துறைகளுடன் இந்த துறை அமைச்சர் (முதல்வர்) இணைந்து செயல்படுவார்.தற்போது முதல்வரிடம் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த துறை சென்றுள்ளது. இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு துறையிலும் செயல்படுதப்படும் "சிறப்பு" திட்டங்களை கண்காணிக்க முடியும். அந்த திட்டங்களை இன்னும் சிறப்பாக எப்படி செய்வது என்பது தொடர்பாக இந்த துறை ஆலோசனைகளை வழங்க முடியும். உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட முடியும். இந்த துறை வழியாக உதயநிதி ஸ்டாலின் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார். இது உதயநிதிக்கு அரசியல் ரீதியாக மைலேஜை கொடுக்கும் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
1000Rs Scheme for house wive to implemented by March 8: Udhayanidhi Stalin may announce scheme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X