தொட்டிலில் இருந்த புடவையை இழுத்து விளையாடிய போது விபரீதம்.. சென்னை ராமாபுரத்தில் சிறுவன் பலி
சென்னை: சென்னை ராமாபுரத்தில் புடவையில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி (38), ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவரது மகன் பாலாஜி (11), 6 ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை ரகுபதி மனைவியை அழைத்து கொண்டு கடைக்கு சென்று விட்டார்.

வீட்டில் மகன் பாலாஜி தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் கதவு திறந்து இருப்பதை பக்கத்து வீட்டில் வசித்து வந்த கோவிந்தராஜ் என்பவர் பார்த்துள்ளார். அப்போது தொட்டிலில் கட்டிய புடவை சிறுவன் பாலாஜியின் கழுத்தை இறுக்கியிருந்தது தெரியவந்தது.

மயங்கிய நிலையில் கிடந்த பாலாஜியை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பாலாஜி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ராயலா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications