சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிள்ளைங்களா இதுங்க.. எத்தனை முறைதான் சொல்றது.. பஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது!

பஸ் டே கொண்டாடிய 17 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    பஸ் கூரை மீது பஸ் டே அட்டகாசம்...பல மாணவர்கள் கைது!

    சென்னை: கொஞ்ச நாளா இந்த தொல்லை இல்லாமல் இருந்தது... நேற்று "பஸ் டே" என்ற பெயரில் பஸ் கூரை மீது ஆட்டம் போட்டு, அட்டகாசம் செய்த மாணவர்களால் சென்னை நகர மக்கள் கடும் எரிச்சல், கோபத்துக்கு ஆளானார்கள்! இதனால் 17 மாணவர்களை சென்னை நகர போலீஸார் கைது செய்துள்ளனர்!

    இப்படி காலேஜ் திறக்கும் நாளன்று இவர்கள் "பஸ் டே" என்ற பெயரில் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    சென்னையில் பச்சையப்பன் காலேஜ், தியாகராயா காலேஜ், நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜ் மாணவர்கள்தான் பெரும்பாலும் இப்படிப்பட்ட வேலைகளில் இறங்குவார்கள்.

    சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. ஹோட்டல்களைத் தொடர்ந்து மேன்ஷன்களும் மூடப்படும் அபாயம் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. ஹோட்டல்களைத் தொடர்ந்து மேன்ஷன்களும் மூடப்படும் அபாயம்

    மோதல்

    மோதல்

    ரூட்டுத் தல 20 வயசு கூட தாண்டாத இந்த பிள்ளைகள், தாங்கள்தான் இந்த சென்னை மாநகரத்தையே கட்டிக்காக்கும் மகான்கள் என்ற நினைப்பில் மோதிக் கொள்வார்கள். "ரூட்டுத் தல " என்று ஒரு பட்டப்பெயரையும் வைத்து கொள்ள பயங்கரமான போட்டி நடக்கும்.

    பட்டாக்கத்தி

    பட்டாக்கத்தி

    ஆளுக்கு ஒரு பட்டாக்கத்தி, அரிவாள்களை பேன்ட்டில் சொருக்கி கொள்வது இவர்களின் கெத்து! நிறைய நேரம் மோதல்களும் வெடிக்கும். எத்தனையோ முறை சென்னை போலீசார் இவர்களை வளைத்து பிடித்து, கொத்தோடு ஜெயிலில் கொண்டு போய் வைத்தாலும் இவர்கள் இன்னும் திருந்தினபாடில்லை.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    "பஸ் டே என்ற பெயரில் கொண்டாடினால், அது அவர்களுடன் மட்டும் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இப்படி பஸ் டே கொண்டாடினால் கடுமையான எச்சரிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே போலீஸ் எச்சரித்தும் இவர்கள் நேத்து வேலையை காட்டினர்.

    ஜன்னல் கம்பி

    ஜன்னல் கம்பி

    சென்னையின் பல பகுதிகளில் காலேஜ் மாணவர்கள் பஸ் டே கொண்டாடினர். பஸ்-க்குள்ளே ஏறி உட்காருவது எல்லாம் இவர்களுக்கு கவுரவ குறைச்சல் என்பதால், உள்ளே இடம் இருந்தாலும் படிக்கட்டில், ஜன்னல் கம்பிகளில் தொங்கிக்கொண்டு வருவது ஸ்டைலாக இருந்தது.

    பஸ் கூரை

    பஸ் கூரை

    இப்போது ஒரு படி மேலே போய், பஸ் கூரை மீது ஏறுவதுதான் ஃபேஷன் ஆகிவிட்டது. நேற்று ஒரு பஸ்ஸில் ஆட்டுமந்தை போல குபுகுபுவென கூரை மீது பிள்ளைகள் ஏறுகிறார்கள். அப்படி ஏறும்போது ஒரு பெண் பயணியின் கையை ஷூக்காலால் மிதித்து கொண்டே ஏறுகிறான் ஒரு மாணவன்! எத்தனை பேரை இடித்து கொண்டும், உதைத்துக் கொண்டும் ஏறுகிறோம் என்றுகூட இவர்களுக்கு தெரிவதில்லை.

    காட்டு கூச்சல்

    கூரை மேலஏறி நின்று கொண்டு ஒரே சத்தம்.. காட்டுக் கூச்சல்.. இதனால் பஸ்ஸை வேகமாக ஓட்டக்கூட முடியவில்லை. இதனால் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. ஒரு பஸ்ஸையே மறைக்கும் அளவுக்கு மாணவர்கள் டாப்-பில் சூழ்ந்து கொண்டு கத்தினார்கள். பொறுத்து பொறுத்து பார்த்த அந்த டிரைவர் திடீரென பிரேக் போடவும், கிட்டத்தட்ட 50- மாணவர்கள் பொத்தென்று பஸ்-ஸில் இருந்து கீழே விழுந்னர். இதில் 5 பேர் காயமடைந்ததாக சொல்லப்படுகிறது.

    கைது

    கைது

    சென்னையில் காலேஜ் மாணவர்கள் திரும்பவும் இப்படி ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை கேள்விப்பட்டதும், போலீசார் விரைந்து வந்தனர். டாப்-ல் நின்று கொண்டிருந்தவர், ஜன்னலில் தொங்கி கொண்டிருந்தவர் என கிட்டத்தட்ட 24 பேர் சிக்கினர். சிலரை எச்சரித்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 17 பேரை கைது செய்து அழைத்து சென்றனர்.

    கடும் நடவடிக்கை

    கடும் நடவடிக்கை

    இன்னொரு முறை இப்படி "பஸ் டே" யாராச்சும் கொண்டாடினால், வருங்காலத்தில் எந்த வேலையும் யாருக்கும் கிடைக்காமல் செய்துவிடுவோம் என்று போலீஸ் தரப்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

    English summary
    17 college students holding bus day in Chennai, and 5 are severe injured.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X