தமிழகத்தில் சரிவு முகத்தில் கொரோனா பாதிப்பு! இன்றைய பாதிப்பு எவ்வளவு? தமிழக அரசின் அறிக்கை இதோ!
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வந்த நிலையில் இரண்டு வாரங்களாக மீண்டும் பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் இன்று மேலும் 1,803 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தினமும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,தமிழகத்தில் மேலும் 1,803 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 35,37,895 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இது நேற்றைய பாதிப்பை விடவும் குறைவாகும்.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை
தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 2,233 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 34,85,579 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இன்று யாரும் உயிரிழக்காத நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 38,032 ஆக உள்ளது.

சென்னை
கொரோனா காரணமாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 396 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 7,81,193 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டில் இன்று மட்டும் 191 பேருக்கும், கோவையில் 169 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மட்டும் கொரோனா 3 இலக்கங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா சோதனை
இதுவரை 6,80,10,624 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 29,117 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 14,284 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை நேற்றை விட குறைந்துள்ளது. இதுவரை மொத்தம் 20,62,672 ஆண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைக்கு மட்டும் 1,079 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் பாதிப்பு
கொரோனாவால் பெண்கள் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 14,75,185 பேர் பெண்கள் எனவும், இன்றைக்கு மட்டும் 724 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 38 திருநங்கைகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருநங்கைகள் இன்று யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் தமிழக அரசின் மருத்துவத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications