மோடி தியானத்திற்காக விவேகானந்தர் மண்டபத்திற்கு வந்த 2 டன் ஏசி.. கன்னியாகுமரியில் சிறப்பு ஏற்பாடு!
சென்னை: நடுக்கடலில் பிரதமர் மோடி தியானம் செய்ய விவேகானந்தர் நினைவு மண்டப தியான அறையில் ஏசி வைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இங்கே சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இன்று லோக்சபா தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் இரண்டு நாட்கள் தியானம் செய்ய உள்ளார். இன்று தமிழ்நாடு வரும் மோடி, குமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளது. கடந்த முறை 2019 லோக்சபா தேர்தலுக்கு பின் கேதார் நாத் குகையில் மோடி தியானம் செய்தார்.

அதேபோல் இந்த முறை தியானம் செய்கிறார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்.. சேனல்களின் எல்லா கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து பிரச்சாரம் முடிந்த பின்பும் கூட தேர்தலுக்கு முன்பாக மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய உள்ளார். சுவாமி விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் மோடி தியானம் செய்வார் . இரண்டு நாட்களுக்கு அவர் தியானம் செய்ய இல்லார்.
முதலில் டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மோடி, பின்னர் கன்னியாகுமரி சென்று மாலையில் நினைவிடத்தை சென்றடைவார். அதன்பின் மாலைக்கு பின் தியானத்தை தொடங்குவார்.
மோடி இந்த விவேகானந்தா தியான மண்டபத்தை தேர்வு செய்தது அரசியல் ஆய்வாளர்களால் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் தத்துவஞானியும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி விவேகானந்தர் மூன்று நாட்கள் இரவும் பகலும் இங்கு தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதே இடத்தில் இறுதிக்கட்ட தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களை கவரும் விதமாக மோடி தியானம் செய்ய உள்ளார்.
தியானத்திற்கு ஏசி: மோடி செய்ய போவது தியானம் என்றாலும் நடுக்கடலில் பிரதமர் மோடி தியானம் செய்ய விவேகானந்தர் நினைவு மண்டப தியான அறையில் ஏசி வைக்கும் ஏற்பாடும் நடந்து வருகின்றன. சுமார் 2 டன் ஏ.சி. நேற்று காலை கொண்டு வரப்பட்டு தியான மண்டபத்தில் பொருத்தப்பட்டது.
இங்கே கிட்டத்தட்ட 3 ஸ்டார் ஹோட்டலுக்கு இணையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. குளிர் சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் கொண்ட சிறப்பு அறை இங்கே தயாரிக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு தீவிரம்; பிரதமர் நரேந்திர மோடி, இன்று தொடங்கி விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் 45 மணி நேர தியானத்தில் ஈடுபட உள்ளதால், இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, முக்கிய நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கிய சில சந்திப்புகளை முடித்துக்கொண்டு மோடி கேரளா வழியாக குமரி செல்ல உள்ளார்.
பிரதமர் மோடி தியானம் செய்வதால், 2,000 போலீசார் மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மே 30 மாலை தொடங்கி ஜூன் 1 மாலை வரை அவர் தியானத்தில் இருப்பார். சுவாமி விவேகானந்தர் அங்கு தனது தெய்வீக தரிசனத்தைப் பெற்றதாக நம்பப்படுவதால் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரில் அங்கு பிரதமர் மோடி செல்லும் நிலையில் நேற்று மாலை ஹெலிகாப்டர் தரையிறங்கும் சோதனை நடத்தப்பட்டது. இங்கே தற்போது சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications