சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சீட் ஷேரிங்" ஓவர்?.. எடப்பாடி 20, பாமக 6, பாஜக 10.. அவங்களுக்கு ஆளுக்கு ஒன்னு.. சொல்றது யார் பாருங்க

செங்கோட்டையன் பேட்டி குறித்து கேசி பழனிசாமி கருத்துக்களை பகிர்ந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவுடன் இணைந்த கூட்டணியைதான் எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி என்று சொல்லி உள்ளார் என்றும், சில கணக்குகள் நடந்து கொண்டிருப்பதாகவும், மூத்த தலைவர் கேசி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கல் கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி என்று பேசியிருந்தார்.

இதையடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில் அதிமுக தனித்து போட்டியிடும் என்று கூறியிருந்தார்.

"துண்டு" சேருதா.. டிடிவி சாரின் "நலன் விரும்பிகள்".. சி.ஆர்.சரஸ்வதி சொல்றது புரியுதா.. அப்ப எடப்பாடி

 வெட்டுக்கிளிகள்

வெட்டுக்கிளிகள்

'அதிமுக கூட்டத்தைக் கூட்டினால் எந்தக் கட்சியும் நம்முடன் போட்டியிட முடியாது. தமிழகத்தில் தனித்து நிற்கிறோம் என எந்தக் கட்சியையாவது சொல்லச் சொல்லுங்கள். அதிமுகவால் தனித்து நிற்க முடியும். நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. நம்மை விட்டுச் சென்றவர்களைப் பற்றி கவலை இல்லை. சில வெட்டுக்கிளிகள் அதிமுகவை விட்டுச் சென்றாலும் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது" என்று கூறியிருந்தார். இந்நிலையில், அதிமுகவின் மூத்த தலைவரான கேசி பழனிசாமி, நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் செங்கோட்டையனின் கருத்து குறித்தும், எடப்பாடியின் மெகா கூட்டணி குறித்தும் கேள்விகளை முன்வைத்தோம்.. கேசி பழனிசாமி நம்மிடம் சொன்னதாவது:

 நம்பிட்டாங்க

நம்பிட்டாங்க

"கடந்த ஆட்சியில் ஒன்றுபட்ட அதிமுக செயல்பட்டது.. தினகரன் மட்டும்தான் வெளியே இருந்தார்.. இதுபோல அதிமுகவில் குழப்பம் இல்லை.. ஆளும் கட்சியாக இருந்தார்கள்.. எல்லாரும் ஒற்றுமையாக இருந்தார்கள்.. கோர்ட், கேஸ் எதுவும் இல்லை.. இந்த சூழலில், சசிகலா, தினகரனை இணைத்து கொள்ளும்படி, ஒரு அறிவுரையாக பாஜக முந்தைய தேர்தலில் சொன்னது.. ஆனால், நானே தனித்து ஜெயித்து விடுவேன் என்று எப்பாடி சொன்னார்.. அவர்களும் எடப்பாடி சொன்னதை நம்பி விட்டுவிட்டார்கள்.. ஆனால், இனி அப்படி கிடையாது.

 ரிஸ்க் பழனிசாமி

ரிஸ்க் பழனிசாமி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதுபோன்ற ரிஸ்க்கை பாஜகவில் எடுக்க மாட்டார்கள்.. அதனால் இலையை முடக்க பார்ப்பார்கள்.. மகாராஷ்டிராவில் நடந்தது எல்லாம் இங்கே நடக்கும்.. ஒருவேளை, சுப்ரீம் கோர்ட்டிலேயே எடப்பாடி பழனிசாமி தரப்பு வெற்றி பெறுகிறது என்று ஒரு வாதத்துக்கே வைத்துக் கொண்டாலும், அதற்கு பிறகு அது தேர்தல் ஆணையத்துக்கு செல்லும்போது, இலையை முடக்க நினைப்பார்கள்.. வழக்குகள் நிறைய பாயும்.. பணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு நிர்வாகிகளை வைத்துள்ளார்.. இன்னைக்கு ஆளுகிற கட்சியாக அதிமுக இருந்திருக்க வேண்டியது.. குறைந்தபட்சம் தோல்விக்கு பிறகாவது, உட்கட்சி பூசல்கள் வந்திருக்க கூடாது..

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

எம்ஜிஆர் காலத்தில் கூட, எஸ்டிஎஸ் போன்றவர்கள் முரண்பட்டார்கள்.. ஆனால், புரட்சி தலைவர் எம்ஜிஆர், யாரையும் இழந்துவிடக்கூடாது என்று அனைவரையும் அரவணைத்தார்.. அம்மா காலத்திலும், காளிமுத்து, பிஎச்.பாண்டியன், பொன்னையன், ஆர்எம் வீரப்பன் எல்லாருமே முரண்பட்டார்கள். ஆனால் அம்மா எல்லாரையுமே அரவணைத்து போனார்கள்.. 88-ல், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஆரம்பித்த அரசியல், 2001-ல்தான், தனிப்பெரும்தலைவராக, அதிலும் "அம்மா" என்ற கட்டத்துடன் அவர் வலம் வர ஆரம்பித்தார்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி "இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்" போல உருவாக நினைக்கிறார்..

 தாமரைக்கனி

தாமரைக்கனி

அவர் தலைவராக உருவெக்க கூடாது என்று நான் சொல்லவில்லை.. ஆனால், பொறுமை இல்லை, அனைவரையும் அரவணைக்கும் தன்மை இல்லை.. நம்மைவிட இயக்கம் பெரிது என்று நினைக்க மறுக்கிறார்.. ஒன்று சொல்கிறேன், எடப்பாடி இல்லாமல் அதிமுக இருக்கும்.. ஆனால், அதிமுக இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் இருக்க முடியாது.. நான் பல வருஷமா இந்த இயக்கத்தில் இருக்கேன்.. தாமரைக்கனி சுயேச்சையாக நின்று அன்று வெற்றி பெற்றார்.. செம்மலையும் அப்படி சுயேச்சையாக நின்று பெற்றார்.. கோவையில் நெகமம் கந்தசாமி என்று ஒருவர் இருந்தார், "நான் நின்றால் பொதுக்கூட்டம், நடந்தால் ஊர்வலம்" என்று சொல்வார்..

 சீட் ஷேரிங்

சீட் ஷேரிங்

அதனால், தனித்துவம் என்பது வேண்டும்.. அதிமுக இல்லாமல் எடப்பாடி கிடையவே கிடையாது.. அம்மா இறந்ததும் ஒரு வெற்றிடம் உருவானதுபோல், எடப்பாடி பழனிசாமி கட்சியில் இல்லாமல் போனால், அதிமுகவில் அப்படி ஒரு வெற்றிடம் என்பதெல்லாம் நடக்காது.. பாஜகவையும் உள்ளடக்கிய மெகா கூட்டணியைதான் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் கூட்டத்தில் சொல்லி உள்ளார்.. பாஜகவிடம் எடப்பாடி தற்போது வைத்திருக்கும் டிமாண்ட் தெரியுமா?

சேலஞ்ச்

சேலஞ்ச்

நான் ஒரு சவால் விடுகிறேன், எடப்பாடி பழனிசாமியை தலைமையை ஏற்றுக் கொள்வதாக ஓபிஎஸ் ஒரு அறிக்கை வெளியிட்டால், அன்னைக்கே ஓபிஎஸ்ஸை வீட்டுக்கு ஓடோடிச்சென்று எடப்பாடி பழனிசாமி பார்க்கிறாரா இல்லையான்னு பாருங்க.. இரட்டை இலையை எடப்பாடியே வைத்துக் கொள்ளட்டும், 2024-ல் எடப்பாடியே முதல்வர் வேட்பாளர், அவர் தலைமையிலேயே கட்சி இயங்கட்டும் என்று ஓபிஎஸ்ஸை சொல்ல சொல்லுங்கள்.. அடுத்த அரை மணி நேரத்திஸ் ஓபிஎஸ் வீட்டில் இருப்பார் எடப்பாடி.. காரணம், சுயநலத்துக்கான போட்டிதான் நடந்து கொண்டிருக்கிறதே தவிர, பெரிய சித்தாந்தமோ, கொள்கையோ கிடையாது..

மடியில் கனம்

மடியில் கனம்


வழக்கு விசாரணயில், பாஜக ஒரேயடியாக இவர்களின் கழுத்தில் சுருக்கை மாட்டி தொடங்க விடமாட்டாங்க.. பின்னாடியே அலைய விட்டுக்கொண்டுதான் இருப்பாங்க.. நாளைக்கே வழக்குகளை முடித்து கைகளில் தந்துவிட மாட்டார்கள்.. கைகளிலேயே இவர்கள் கேஸ்களை வைத்திருப்பார்கள்.. எம்பி தேர்தல் மட்டும் இல்லை பாஜகவின் டிமாண்டு, வரும் 2026-ல்ஆட்சி அமைப்பதாகவும் சொல்றாங்க.. குறைந்தபட்சம் துணை முதல்வர் பதவியையாவது கேட்பாங்க.. மடியில் கனம் இருக்கும்வரை பாஜகவை எதிர்க்கமாட்டார் எடப்பாடி பழனிசாமி.. ஓபிஎஸ் - எடப்பாடி இவங்க 2 பேர் மட்டுமே கட்சி கிடையாது.. அதிமுக தொண்டர்கள், அதிமுக வாக்காளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.. அதேசமயம், பாஜகவை கடைசிவரை எடப்பாடியால் எதிர்க்கவும் முடியாது" என்றார்.

English summary
20 + 6 + 10 seats and Has BJP started seat sharing for Edappadi Palanisamy, says KC Palanisamy : Specials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X