சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூக்கில் தொங்கிய கயிறு எங்கே.. தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே.. உலுக்கிய பாத்திமா மரணம்

பாத்திமாவின் தற்கொலை மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோம்.. மாணவி பாத்திமாவின் தாய் கண்ணீர்

    சென்னை: எத்தனையோ தற்கொலைகளுக்கு முடிவு கிடைத்தாலும்.. இந்த வருடம் நடந்த ஐஐடி மாணவி பாத்திமாவின் தற்கொலைக்கான தீர்வு இன்னும் கிடைத்தபாடில்லை.. "முஸ்லிம் பெண்கள் அணியும் முக்காடுகூட என் மகளை அணியவிடவில்லை. முக்காடு அணிந்திருந்தால் முஸ்லிம் பெண் என்ற அடிப்படையில் அவளுக்கு எதாவது தொல்லை வரும் என்று நாங்கள் பயந்து கிடந்தோம்.. தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சுதான் அனுப்பி வெச்சோம்" என்று பாத்திமாவின் அம்மா பேசியதற்கு சரியான பதிலடியை யாராலும் தர முடியவில்லை என்பதே நிஜம்!

    கேரள இளம்பெண் பாத்திமா லத்தீப்.. சென்னை ஐஐடி வளாகத்தில், தன்னுடைய ஹாஸ்டல் ரூமிலேயே நவம்பர் 8ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தனக்கு வழக்கமாக போன் செய்யவில்லை என்றதுமே, பெற்றவர்கள் போனில் தொடர்பு கொண்டும் முடியவில்லை.. இதற்கு பிறகுதான் பக்கத்து ரூம் பிள்ளைகளை அனுப்பி என்ன ஏதென்று பார்க்க சொல்லவும், பாத்திமா தூக்கில் சடலமாக கிடந்தார்.

    இந்த வழக்கினை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்றொரு புறம், சம்பந்தப்பட்ட ஐஐடி பேராசிரியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. தன்னுடைய தற்கொலைக்கு காரணம் 3 பேராசிரியர்களே என்று பாத்திமா எழுதி வைத்துவிட்டு போன குறிப்பு இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

    <strong>We miss you Tamilisai:</strong> We miss you Tamilisai: "அப்பா என்கூட பேசலையே".. ஏங்கி தவித்த தமிழிசை.. அவரில்லாமல் தவிக்கும் தமிழகம்

    பாத்திமா

    பாத்திமா

    அதனால், பாத்திமாவின் செல்போன், லேப்டாப்களும் தடயவியல் துறையினரால் ஆராயப்பட்டது. தற்கொலை குறிப்பு, செல்போன் பதிவுகள் போலியானது அல்ல, செல்போனில் இருந்த தற்கொலை குறிப்பு உண்மையானதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    அமித்ஷா

    அமித்ஷா

    கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமி‌‌ஷனர் ஈஸ்வர மூர்த்தி, அமித்ஷா, பிரதமர் போன்றோரை பாத்திமாவின் பெற்றோர் சந்தித்து மகளின் மரணத்துக்கு நீதிகேட்டு வலியுறுத்தி வந்தனர்.. இதனடிப்படையில் சிபிஐ-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

    தூக்கு கயிறு

    தூக்கு கயிறு

    ஆனால், "என் மகளின் சாவு தற்கொலையாக இருக்க வாய்ப்பே இல்லை.. அவள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அதிகமாக உள்ளது.. தற்கொலைக்கான அறிகுறிகள் எனது மகள் உடலில் இல்லை... செல்போனை யார் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வகையில் அறையில் கிடந்தது.. எனது மகள் தூக்கில் தொங்க கயிறு எப்படி கிடைத்தது. அது எங்கு கிடைத்தது. இப்போது அது எங்கே உள்ளது. எனது மகள் மரணித்த பிறகு அவரது அறையை பூட்டி ஏன் சீல் வைக்கவில்லை" என்று பாத்திமாவின் அப்பா கேட்ட கேள்விகளுக்கு பதில் இன்னமும் இல்லை!

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    "தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சுதானே அனுப்பி வெச்சோம்" என்று பாத்திமாவின் அம்மா கேட்டதற்கும் பதில் இல்லை.. திமுக தலைவர் முக ஸ்டாலின் கேட்டதுபோல, ஐஐடியா? மர்ம தீவா? என்ற சந்தேகம் மட்டுமே நமக்கும் எழுந்துள்ளது. இந்த 5 வருஷத்தில் மட்டும், 10 ஐஐடிகளில் மொத்தம் 27 மாணவர்கள் வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. இந்த 27 பேரில் 7 மாணவர்கள் சென்னை ஐஐடி மாணவர்கள்தான் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையே தெரிவித்துள்ளதை என்னவென்று சொல்வது?

    தாக்கம்

    தாக்கம்

    எப்படி பார்த்தாலும் இனி ஒரு உயிரிழப்பு, ஐஐடி என்ற மிகப்பெரிய கல்வி நிறுவன வளாகத்துக்குள் நடந்துவிடக்கூடாது என்பதே நிஜம்! அப்படி ஒரு தாக்கத்தைதான் இந்த வருடம் பாத்திமா தற்கொலை நமக்கு ஏற்படுத்திவிட்டு போயுள்ளது!

    English summary
    2019 Year Ender crime stories: iit student fathima suicide case issue in chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X