சோலி முடிஞ்சது.. அதிமுக - தவெக கூட்டணி வைத்தால்.. திமுகவிற்கு பெரிய சிக்கல்! கருத்து கணிப்பை பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைக்கும் பட்சத்தில் அது திமுகவின் தோல்விக்கு கூட வழிவகுக்கும் என்று தேர்தல் தொடர்பான சர்வே முடிவுகள் ஒன்று தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக இப்போதே சர்வேக்கள் நடத்தப்படுகின்றன. 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, 'வோட் வைப்' என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. திமுக அரசுக்கு எதிராக 41% பேர் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள், அதே நேரத்தில், 31% பேர் திமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம், பல சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு தேர்தல் தொடர்பான சர்வே
ஆனால் அதே சமயம் மாநில வளர்ச்சியில் மக்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்ற கேள்விக்கு, 37% பேர் திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். அதிமுக கூட்டணி 32% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது அரசியல் பார்வையாளர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது.
நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம் (டி.வி.கே) கட்சி மூன்றாவது விருப்பமாக வேகமாக வளர்ந்து வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு செப்டம்பர் 2024-ல் பதிவு செய்யப்பட்ட இந்தக் கட்சிக்கு 12% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது அரசியல் களத்தில் ஒரு புதுமையான திருப்பமாக கருதப்படுகிறது.
3ம் இடத்தில் இருந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நல்ல மக்கள் செல்வாக்கு இருப்பது இந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. விஜய் வந்தால் வளர்ச்சி வரும் என்று இந்த 12% மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
கூட்டணி வைத்தால் தோல்வி
தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைக்கும் பட்சத்தில் அது திமுகவின் தோல்விக்கு கூட வழிவகுக்கும் என்று தேர்தல் தொடர்பான சர்வே முடிவுகள் ஒன்று தெரிவிக்கின்றன. அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைத்தால் என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு கூட்டணி அமைந்தால், திமுகவின் தோல்விக்கு வழிவகுக்கும் எனத் தெரிகிறது. மேற்கண்ட கருத்து கணிப்பின்படி அதிமுக - தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைத்தால் மொத்த வாக்கு சதவிகிதம் 44 ஆக உயரும்.
அப்படி உயரும் பட்சத்தில் அது திமுகவின் வாக்கு சதவிகிதத்தை அதாவது 37% சதவிகிதத்தை விட அதிகமாக இருக்கும். இது திமுகவின் தோல்விக்கு கூட காரணமாக இருக்கலாம் என்று இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த கூட்டணி உருவாகும் பட்சத்தில் அது வெற்றி கூட்டணியாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
மூன்றாம் இடத்தில் இருந்தாலும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு நல்ல மக்கள் செல்வாக்கு இருப்பது இந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. விஜய் வந்தால் வளர்ச்சி வரும் என்று இந்த 12% மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.தேர்தல் குறித்த இந்த ஆய்வுகள், அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் எதிர்கால வியூகங்களை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட்












Click it and Unblock the Notifications