சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு.. 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து?.. முக்கிய தளர்வுகள் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வரும் ஜூன் 28 ஆம் தேதி முதல் அடுத்த கட்ட ஊரடங்கில் தளர்வுகள் என்னென்ன இருக்கலாம் என்பது குறித்த உத்தேச தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த மே 10 ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் இருந்து வருகிறது. இதையடுத்து நடுவில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டன.

10 வருடங்களுக்கு பிறகு திமுகவின் பட்ஜெட்.. பிடிஆர் என்ன செய்யப்போகிறார்.. ஸ்டாலினின் பிளான் என்ன? 10 வருடங்களுக்கு பிறகு திமுகவின் பட்ஜெட்.. பிடிஆர் என்ன செய்யப்போகிறார்.. ஸ்டாலினின் பிளான் என்ன?

11 மாவட்டங்கள்

11 மாவட்டங்கள்

வகை 1 இல் தொற்று அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து வகை 2-இல் 23 மாவட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

23 மாவட்டங்கள்

23 மாவட்டங்கள்

அவை: அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகும்.

4 மாவட்டங்கள்

4 மாவட்டங்கள்

வகை 3 இல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களாகும். இந்த நிலையில் வகை 3 இல் உள்ள 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்து போக்குவரத்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இயங்கும் நேரம்

இயங்கும் நேரம்

இந்த தளர்வுகள் வரும் ஜூன் 28-ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைய போகிறது. எனவே அடுத்த கட்ட தளர்வுகளில் என்னென்ன இடம்பெற வாய்ப்பு என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 7 மணி வரை இயக்கப்பட்டு வரும் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறதாம்.

மாவட்டங்கள்

மாவட்டங்கள்

பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நகைக் கடைகள், துணிக் கடைகள் திறக்கப்படும் என தெரிகிறது. இவை குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க அனுமதிக்கப்படும். 4 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ள பேருந்து போக்குவரத்து மற்ற 23 மாவட்டங்களுக்கு அதாவது வகை 2 இல் கூறப்பட்ட மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்படும் என தெரிகிறது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

மிகவும் சிறிய வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி அளிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அது போல் பேருந்து போக்குவரத்தை தவிர்த்து தொறறு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் 3 வகைகளாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் ஒரு வகையிலிருந்து மற்றொரு வகைக்கு மாற்றப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

English summary
23 districts of Type 2 will get bus movement in Tamilnadu for coming week?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X