சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"3 ராஜாக்கள்".. நொறுங்குகிறதா பாஜக கோட்டை.. எடப்பாடியே எதிர்பார்க்கல போல.. அடித்து ஆட துவங்கும் திமுக

திமுக கூட்டணியில் 3 புதிய கட்சிகள் கூட்டணி வைக்கலாம் என்ற கணக்கு ஓடுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாமக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில், திமுக கூட்டணி குறித்த பேச்சுக்கள் வட்டமடிக்க ஆரம்பித்துள்ளன.

அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையை தீர்க்கவும் முடியாமல், அதிமுகவின் பிரதான ஓட்டுவங்கியை இழக்கவும் மனமில்லாத நிலையில், பாஜக லேசாக திணறி போயுள்ளதாக தெரிகிறது.
எனவே, வரும் எம்பி தேர்தலில் தனித்து கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? அல்லது அதிமுக கூட்டணியிலேயே இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்த ஆலோசனையை பாஜக தரப்பு மேற்கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளதாக சொல்கிறார்கள்.

இந்திய அணியில் இடம்.. ஆனால் குடும்ப நிலை.. அறிந்ததும் முதல்வர் போட்ட ஆர்டர் - பறந்து சென்ற அமைச்சர்!இந்திய அணியில் இடம்.. ஆனால் குடும்ப நிலை.. அறிந்ததும் முதல்வர் போட்ட ஆர்டர் - பறந்து சென்ற அமைச்சர்!

ஓவர் விழிப்பு

ஓவர் விழிப்பு

அதாவது, எடப்பாடி தங்கள் முடிவுக்கு ஒத்துழைக்காவிட்டாலும், மற்றவர்களை இணைத்து தன்னுடைய தலைமையில் தேர்தலை சந்திக்கவும் பாஜக விழிப்பாகவே உள்ளது.. மற்றொருபக்கம் அதிமுகவை எடுத்துக் கொண்டால், கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுமே மிகவும் சோர்ந்து போயுள்ளார்களாம்.. இதில் மிக முக்கியமான கட்சியாக பாமக உள்ளது.. கடந்த சில மாதங்களாகவே, அதிமுகவை பாமக கடுமையாக தாக்கி பேசி வருகிறது.. அதிலும் அன்புமணி ராமதாஸ், அதிமுகவை விடாமல் குற்றஞ்சாட்டி வந்தார்.

தயவு தாட்சண்யம்

தயவு தாட்சண்யம்

அதனால் இந்த முறை அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்ற யூகங்கள் 6 மாத காலமாகவே வட்டமடித்து வந்தது.. இன்றைய தினம், அதை தெளிவுபடுத்தி உள்ளார் அன்புமணி ராமதாஸ்.. ஓரளவு இது எதிர்பார்த்த முடிவு என்றாலும், இதற்கு பின்னணி காரணங்கள் என்ன என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.. இந்த முறை திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே, பாமக தன்னுடைய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.. டாக்டர் ராமதாஸ், முன்புபோல் திமுகவை கடிந்து கொள்வதில்லை.. தாக்கி பேசுவதும் இல்லை.

நல்லுறவு

நல்லுறவு

இதற்கு 2 காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.. ஒன்று, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக அரசின் தயவை பாமக எதிர்நோக்கி உள்ளதால், திமுகவை பகைத்து கொள்ள முடியாத நிலை உள்ளதாக சொல்கிறார்கள்.. மற்றொருபக்கம், இத்தனை வருடம் நல்லுறவு வைத்திருந்தும்கூட, அமைச்சர் பதவி என்பதை கடைசிவரை மத்திய பாஜக தரவில்லை.. இதனால் சலிப்படைந்த பாமக, இதற்கு பேசாமல் திமுகவுடனேயே கூட்டணி வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

அதேபோல, திமுகவை எடுத்துக் கொண்டால், விசிக + கம்யூனிஸ்ட் + காங்கிரஸ் என மெகா கூட்டணியாக இருக்கிறது.. இந்த 3 கட்சிகளுமே தேர்தல் சமயங்களில் வாக்கு வங்கிகளை பலப்படுத்தும் கட்சிகள் என்பதால், வலிமையான கூட்டணியை திமுக வைத்துள்ளது.. அதேசமயம், மத்திய பாஜகவை எதிர்க்க, இந்த கூட்டணி பலம் போதாது என்றும் நினைப்பதாக தெரிகிறது.. இதற்காக, தேமுதிக + பாமக + மநீம 3 கட்சிகளையும் இணைக்க, திமுகவும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. சுருக்கமாக சொல்லப்போனால், தேசிய அளவில் பாஜக கூட்டணியை எதிர்கொள்ள, அனைவருமே ஒன்று சேர்ந்தால் தான் முடியும் என்று திமுக நம்புகிறது..

பாரிவேந்தர்

பாரிவேந்தர்

பாரிவேந்தரை தவிர்த்துவிட்டு பார்த்தால், திமுகவுடன் ஏற்கனவே 3 வலுவான கட்சிகள் கூட்டணியில் உள்ள நிலையில், மேலும் 3 வலுவான கட்சிகளும் இணையும் பட்சத்தில் அது பாஜகவுக்கு வைக்கப்படும் செக்காக பார்க்கப்படுகிறது.. அத்துடன், எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கும் ஜெர்க்கை தரும் வகையில் இந்த கூட்டணி அமையும் என்கிறார்கள்.. அதிமுகவில் பாமக கூட்டணி வைக்காது என்று அன்புமணி இன்றைய தினம் சொல்லி உள்ள நிலையில், அதிமுகவுடனான கூட்டணி உறவு முறித்துவிட்டதாக தெரிந்தாலும், அடுத்தக்கட்ட கூட்டணி கணக்குகள் வெகுவாக தமிழக அரசியலில் மாற துவங்கி விட்டதாகவே தெரிகிறது.. பார்ப்போம்..!!

English summary
3 Big Parties may join with dmk alliance and what will edapadi palanisamy do the next
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X