கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை.. சட்டசபையில் திமுக, அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மற்றும் சென்னை திருவொற்றியூர் மாணவர் படுகொலை சம்பவம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க கோரி சட்டசபையில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

சென்னை: கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மற்றும் சென்னை திருவொற்றியூர் மாணவர் படுகொலை சம்பவம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க கோரி சட்டசபையில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

3 TN Mens shot dead in Karnataka DMK AIADMK PMK move attention motions in the Assembly

தமிழக சட்டசபை 4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று கூடியது. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதத்தினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் தவெக அரசின் 100 நாட்களை நிறைவு செய்ததற்கு முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சட்டசபையில் பேசிய முன்னாள் அமைச்சர் எவ வேலு, "கர்நாடகாவில் 3 தமிழர்கள் படுகொலை செய்யபட்டுள்ளனர். திருவொற்றியூரில் பிளஸ் 2 மாணவர் தனுஷ் குமார் படுகொலை, மேகமலை மக்கள் வெளியேற்றம், சென்னையில் 400 மடங்கு சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதத்திற்கு எடுத்துகொள்ள வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், ஏற்கனவே இரண்டு விவகாரங்கள் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்டு இருக்கிறார். அதற்கு பேச அனுமதி அளிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழர்கள் 3 பேர் கர்நாடக வனத்துறையால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து பேச வேண்டும்.. சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கொத்து கொத்தாக மீன்கள் இறந்து கிடக்கிறது. இதுகுறித்தும் பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.

இதே போன்று பாமக எம் எல் ஏ கணேஷ்குமாரும் கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என பேசினார். மேலும் கோவை அமுதன் கொலை, திருவொற்றியூர் தனுஷ் குமார் கொலை, கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் கொத்து கொத்தாக இறந்தது குறித்த் பேச வேண்டும் என கூறினார். சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், இது குறித்து அமைச்சர்களின் பதில்களை பெற்று உரிய நேரத்தில் அவையில் தெரிவிக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+