சென்னையில் 4 ரேடார்கள் இயங்குகின்றன... சந்தேகம் வேண்டாம் - பாலச்சந்திரன் விளக்கம்

ரேடார்கள் தொடர்ந்து இயங்குவதால் அது குறித்து யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம் என வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேடார்கள் தொடர்ந்து இயங்குவதால் அது குறித்து யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம் என வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 4 ரேடார்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

சென்னையில் இரண்டு ரேடார்களும், காரைக்காலில் ஒன்று ஸ்ரீஹரிகோட்டாவில் ஒன்று என நான்கு ரேடார்கள் உள்ளன. அதில் சென்னையில் உள்ளது எக்ஸ்பேண்ட் ரேடார். மற்றொன்று பள்ளிக்கரணையில் உள்ளது. அந்தவகையில் தற்போது சென்னைக்கு நான்கு ரேடார்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்று முதல் 11ஆம் தேதி வரைக்கும் பல மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. மழை, வானிலையை கணிக்கும் இரண்டு முக்கியமான ரேடார்கள் செயல் இழந்து விட்டதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. காரைக்கால், சென்னையில் இருக்கும் வானிலை ஆய்வு மைய ரேடார்கள் செயல் இழந்துள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரேடார்கள் வேலை செய்யவில்லை எனவும் தகவல்கள் வெளியானது.
இது குறித்து அரசியல் கட்சியினர் பலரும் கேள்வி எழுப்பினர்.

ரேடார் பாதிப்பு

ரேடார் பாதிப்பு

சு.வெங்கடேசன் தனது அறிக்கையில், சென்னை துறைமுகம் அருகேயுள்ள உள்ள Doppler Weather Radar 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து பலமுறை பழுதாகியுள்ள இந்த ரேடார் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும் கூட வேலை செய்யாமல் உள்ளதாக குற்றம் சாட்டினார். பருவமழை தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் உடனடியாக புதிய ரேடார் ஒன்றை சென்னையில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

பாலச்சந்திரன் விளக்கம்

பாலச்சந்திரன் விளக்கம்

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல வானிலை வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 4 ரேடார்கள் செயல்பாட்டில் உள்ளதாக கூறினார். ரேடார்கள் செயல்படுவது பற்றியும் செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் விளக்கம் அளித்தார்.

நாள் முழுவதும் செயல்படும்

நாள் முழுவதும் செயல்படும்

வானிலை ஆய்வு மையத்தில் உள்ள எக்ஸ்பேண்ட் ரேடார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்டது. அதில் ஒரு சில பாகங்கள் தேய்ந்து விட்டதால் 24 மணிநேரமும் இயக்க முடியாது சில மணி நேரங்கள் நிறுத்தி வைத்து தேவைப்படும் போது இயக்கப்படும். அதே நேரத்தில் பள்ளிக்கரணையில் உள்ள ரேடாரை 24 மணிநேரமும் இயக்கலாம்.

சந்தேகம் வேண்டாம்

சந்தேகம் வேண்டாம்

தேய்ந்து போன எக்ஸ் பேண்ட் ரேடாரை சரி செய்ய இஸ்ரோ உடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. புதிய பாகம் பொருத்தப்பட்ட உடன் எக்ஸ் பேண்ட் ரேடார் நன்றாக இயங்கும். தொழில் நுட்ப கோளாறு காரணமாக சில சமயங்களில் ரேடார்கள் செயல்படாது. அதனை இந்திய வானிலை ஆய்வு மையம் சரி செய்து விடும். இந்திய வானிலை ஆய்வு மையத்தில் மிகச்சிறந்த ரேடார் நிபுணர்கள் இருக்கின்றனர். எனவே ரேடார் செயல்பாடு பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

Recommended Video

    Chennai-ல் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை மையம்
    வானிலை நிலவரம் கண்காணித்து வருகிறோம்

    வானிலை நிலவரம் கண்காணித்து வருகிறோம்

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் புதிதாக 10 இடங்களில் அதிவேக காற்று கணிக்கிடும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. 75 இடங்களில் தானியியங்கி மழைமானி கருவியும் 45 இடங்களில் தானியியங்கி வானிலை நிலையமும் பொருத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் 12 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. வானிலை கணிப்புக்கு பல்வேறு தரவுகள் தேவை. ஆனால் ரேடார் இல்லாமல் வானிலை கணிக்க முடியாது என்பது தவறு. பல்வேறு தகவல்கள் வானிலை ஆய்வு மையத்திற்கு உள்ளது. தொடர்ந்து வானிலை நிலவரம் கண்காணித்து வருகிறோம் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+