"கேம் ஓவர்".. 40 எம்எல்ஏக்களாமே.. தேனி தலைவரால் கலைகிறது "தேன்கூடு".. இறுக்கி பிடிக்கும் எடப்பாடி

எடப்பாடியிடம் உள்ள 40 எம்எல்ஏக்களை இழுக்க ஓபிஎஸ்ஃ டீம் முயற்சித்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்பீலுக்கு சென்றுள்ளதால், அங்கு வரும் தீர்ப்பு மட்டுமே எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடியதாக உள்ளது.. இந்நிலையில், சசிகலா + ஓபிஎஸ் டீமின் அதிரடிகள் எடப்பாடி தரப்பை கலங்கடிக்க செய்து வருகிறதாம்.
எப்படியும் தீர்ப்பு தனக்கு சாதகமாகவே வரும் என்று எடப்பாடி டீம் நம்பிக் கொண்டிருக்கிறது.. இந்த முறையும் சாதகமான உத்தரவே தங்களுக்கு கிடைக்கும் என்று ஓபிஎஸ் டீம் நம்பிக் கொண்டிருக்கிறது.

இதற்கு நடுவில், ஆதரவாளர்களையும், அதிருப்தியாளர்களையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஓபிஎஸ்ஸும், அவர்களை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் எடப்பாடியும் தீவிரமாகி உள்ளனர்.

 பிளான் + 1

பிளான் + 1

அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி அணியிலேயே இருக்கும் நிலையில், அவர்களை தங்கள் பக்கம் இழுக்கவே முதல் பிளான் போடப்பட்டுள்ளதாம். இப்போதைக்கு அதிமுகவில் 65 எம்எல்ஏக்களில், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மட்டுமே இருந்து வந்தனர்... அதனால்தான், எடப்பாடியின் தீவிர ஆதரவாளரான ஆர்.பி. உதயகுமாருக்கு நெருக்கமாக இருந்த அய்யப்பன் எம்எல்ஏவுக்கு ஸ்கெட்ச் போடப்பட்டது.. 2 முறை ரகசிய பேச்சும் நடத்தப்பட்டது.. இறுதியில் ஓபிஎஸ் பக்கமும் தாவிவிட்டார்.

 பிளான் + 2

பிளான் + 2

இவரை போலவே, பல எம்எல்ஏக்களையும் தங்கள் பக்கம் இழுக்க ஓபிஎஸ். தரப்பினர் முயற்சித்து வருகிறார்களாம்.. இதுபோல 40 எம்எல்ஏக்களையாவது தங்கள் அணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற டார்கெட்டில் இறங்கியதன் பலன் தற்போது கிடைத்து வருகிறதாம்.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆட்டத்தை துவங்கி பல விக்கெட்டுகளை சரிய வைத்தும் வருவதாக கூறப்படுகிறது.. அதன்படி, பழனிசாமியின் டீமில் உள்ள எம்எல்ஏக்களுடன் போனில் தொடர்பு கொண்டு ரகசிய பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருசிலர் அதில் டைம் கேட்டுள்ளனராம்.

 லீக் ஆன ரகசியம்

லீக் ஆன ரகசியம்

மேலும் பலர், ஹைகோர்ட்டில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரட்டும், வந்துவிடுகிறோம் என்று நம்பிக்கையுடன் சொல்லி உள்ளனராம்.. ஓபிஎஸ்ஸின் இந்த அதிரடியை பார்த்து, சசிகலா, தினகரன் இருவருமே ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.. இதற்கு தேவையான "தாராளமான" விஷயங்களையும் ஓபிஎஸ் டீமுக்கு உதவ சசிகலா முன்வந்துள்ளாராம்.. எடப்பாடி டீமில் உள்ள எம்எல்ஏக்களை, சசிகலாவின் இந்த முடிவு திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. இதனிடையே, ஓபிஎஸ்ஸின் இந்த ஆள் பிடிக்கும் வேலை எடுபடாது என்கிறார்கள் எடப்பாடி டீமில் உள்ளவர்கள்.. நாங்கள் யாருமே ஓபிஎஸ் பக்கம் போக விரும்பவில்லை..

"40 எம்எல்ஏக்கள்"

அன்று அதிமுக அலுவலகத்தில் புகுந்து ரகளை செய்ததையும், பொருட்களை திருடி சென்றதையும் எந்த அதிமுக தொண்டனும் இன்னும் மறக்கவில்லை.. அதனால், எடப்பாடி அணியில் இருப்பவர்கள், ஒருக்காலும் ஓபிஎஸ் பக்கம் போக மாட்டோம்" என்று சொல்லி வருகிறார்கள்.. 40 எம்எல்ஏக்களுக்கு வலை விரிக்கப்பட்ட நிலையில், ஐகோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம், தீர்ப்பு கிடைத்ததும் வந்துவிடுகிறோம் என்கிறார்களாம்.. இன்னொரு பக்கம், ஓபிஎஸ் பக்கம் போகவே யாருக்கும் விருப்பமில்லை என்றும் சொல்கிறார்களாம்.

 தேன்கூடு

தேன்கூடு

இப்படி இருவித தகவல்கள் வட்டமடிக்கும் நிலையில், சசிகலா, 20-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாகவும் இன்னொரு தகவல் வருகிறது.. பேச்சுவார்த்தைகளும் + அணி தாவல்களும் இனி அடிக்கடி ஓபிஎஸ் தரப்பில் நிகழும் என்று ஆரூடம் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்களும்.. சட்டரீதியான சிக்கலில் எடப்பாடி இருந்தாலும், மெஜாரிட்டி உறுப்பினர்கள்தான் தன்னுடைய மொத்த பலமாக நினைக்கிறார்.. அதிலும் எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதுதான், இன்றுவரை எடப்பாடிக்கான தைரியத்தையும் தந்து வருகிறது.. அந்த "தேன்கூட்டில்"தான், தேனியில் இருந்து கல்லெறியப்பட்டு வருகிறதாம்...!

"தப்பு கணக்கு"

சட்டரீதியாக ஒருபக்க போராட்டம் என்றால், மாந்திரீகம், கேரளாஜோசிய, யாகம் என இன்னொரு வழியை தேர்ந்தெடுத்து சென்றுகொண்டிருக்கிறார் எடப்பாடி. யாக மையை நெற்றியிலும் வைத்துக் கொண்டுதான் பொதுக்குழுவுக்கே வருகிறார். ஆனாலும், கோர்ட்உத்தரவுகள் சாதகமாக இல்லை.. இதற்குநடுவில், பாஜகவும் மொத்தமாக கைவிட்டுவிட்டநிலையில், நாலாபக்க நெருக்கடிகள் எடப்பாடி பழனிசாமிக்கு சூழ்ந்துள்ளதாகவே தெரிகிறது.. சட்டரீதியான முடிவுகளால், மனம்மாறி சரண்டர் ஆகக்கூடும் என்று பாஜக ஒரு கணக்கு போட்டால், காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, ஒரு "யூகம்" கிளப்பிவிடப்பட்டு, பாஜகவுக்கு கணக்கு போடுகிறதாம் எடப்பாடி தரப்பு.. ஆக மொத்தம் இரு தரப்பிலுமே பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+