Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜம்மு - காஷ்மீரில் உள்ள 41 தமிழக மாணவர்கள்.. பத்திரமாக மீட்கப்படுவார்கள்.. உதவி எண்கள் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜம்மு - காஷ்மீரில் உள்ள தமிழ்நாடு மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் கல்வி பயின்று வரும் 41 மாணவர்கள் பாதுகாப்புடன் தமிழக அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறியதோடு, அவர்களுக்கான உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் அறிவிக்கப்படாத போர் நடைபெற்று வருகிறது. காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியா தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டு பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது.

41 Tamilnadu Students will be rescued from Jammu - Kashmir safely says Tamilnadu Government and Helpline numbers announced

இதனைத் தொடர்ந்து நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், ஜெய்சல்மார், பூஞ்ச், உரி உள்ளிட்ட பகுதிகளில் டிரோன் மற்றும் ஏவுகணைகள் தாக்குதலை தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூருக்கு பின் இந்திய பாதுகாப்பு படை அலர்ட்-ஆக இருந்து வந்தது. இதனால் பாகிஸ்தானின் தாக்குதலை எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பு மூலமாக முறியடித்தது.

இதனிடையே ஜம்மு - காஷ்மீரில் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அங்கு கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் பாதுகாப்பு திரும்ப ஏற்பாடுகளை செய்யக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதம் எழுதினர். இந்த நிலையில் காஷ்மீரில் கல்வி பயின்று 41 தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், காஷ்மீரில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்புடன் உறுதியாக மீட்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அயலக தமிழர் நல வாரியம் தரப்பில், காஷ்மீர் நிலைமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

ஜம்மு - காஷ்மீரில் உள்ள 41 தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீநகரில் தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனம், வேளாண் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் பயிலும் 41 மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள சூழல் சீரானவுடன் மாணவர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உதவி தேவைப்படும் மாணவர்கள் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்கள் மற்றும் வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் மாணவர்கள் 75503 31902 மற்றும் 80690 09901 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்கள் மூலமாக தமிழக அரசின் உதவிகளை மாணவர்கள் பெற முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+