சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"வேக்சின்" முதல்வர் அழைப்பு விடுத்து 10 நாள்தான்.. மொத்தமாக திரண்டு வந்த 45 நிறுவனங்கள்.. நம்பிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் வேக்சின் தயாரிக்கவும், ஆக்சிஜன் தயாரிக்கவும் பல்வேறு மருத்துவ துறை தொடர்பான உற்பத்திகளை மேற்கொள்ளவும் 45 நிறுவனங்கள் தமிழ்நாட்டு அரசிடம் விருப்பம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறையில் தன்னிறைவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டு அரசு உள்ளது. கொரோனா மூன்றாம் அலை கண்டிப்பாக ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன் அனைத்திற்கும் தயாராக இருக்கும் வகையில் தமிழ்நாட்டு அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.

வெளிநாடுகளையும், வெளிமாநிலங்களையும் நம்பிக்கொண்டு இருக்காமல் முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே சுகாதாரத்துறை தொடர்பான உற்பத்திகளை மேற்கொள்ள தமிழ்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது.

வேடிக்கை பார்க்க முடியாது.. வேக்சின் வாங்க ஒதுக்கிய ரூ.35000 கோடி என்ன ஆனது.. சுப்ரீம் கோர்ட் கேள்வ வேடிக்கை பார்க்க முடியாது.. வேக்சின் வாங்க ஒதுக்கிய ரூ.35000 கோடி என்ன ஆனது.. சுப்ரீம் கோர்ட் கேள்வ

திட்டம்

திட்டம்

இந்த நிலையில் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டை சேர்ந்த பெரிய நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார். வேக்சின், ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுத்து இருந்தார். அதோடு சிப்காட் சார்பாக இதற்காக முறையான அழைப்பும் விடுக்கப்பட்டு இருந்தது.

ஏற்றுக்கொண்டது

ஏற்றுக்கொண்டது

கடந்த 10 நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்த நிலையில், தமிழ்நாட்டு அரசின் அழைப்பை ஏற்றுக்கொண்டு மொத்தம் 45 நிறுவனங்கள் வேக்சின், ஆக்சிஜன் தயாரிக்க முன் வந்து இருக்கின்றன. பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள், உயர் நிறுவனங்கள், மருத்துவ துறையில் அனுபவம் கொண்ட நிறுவனங்கள், வேக்சின், ஆக்சிஜன் தயாரிக்க நாங்கள் தயார் என்று தெரிவித்து இருக்கின்றன.

விருப்ப மனு

விருப்ப மனு

இவர்களின் விருப்ப மனுக்கள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. இதில் பல நிறுவனங்கள் வேக்சின் தயாரிக்கும் கட்டமைப்பு எங்களிடம் உள்ளது. அனுமதி பெற்று, வேக்சின் தயாரிப்பு பணிகளை தொடங்க முடியும் என்று குறிப்பிட்டு இருக்கின்றன. அதோடு இன்னும் பல நிறுவனங்கள் நாங்கள் ஆக்சிஜன் தயாரிக்க தயார், எங்களிடம் கட்டமைப்பு வசதிகள் உள்ளன என்றும் குறிப்பிட்டு உள்ளன.

நிறுவனங்கள்

நிறுவனங்கள்

தமிழ்நாட்டு அரசு எல்லா அரசு மருத்துவமனைக்கும் வெளியிலும் ஆக்சிஜன் தயாரிப்பு மையங்களை உருவாக்கும் முடிவில் உள்ளது. ஆக்சிஜனை வெளியில் இருந்து கொண்டு வராமல், மருத்துவமனையில் இருந்தே, ஆக்சிஜனை தயாரிக்கும் பணிகளை செய்யும் திட்டத்தில் இருக்கிறது. இந்த பணிகளை செய்யவும் தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து இருக்கின்றன.

விரைவில்

விரைவில்

தமிழ்நாட்டில் சுகாதாரத்துறையில் தன்னிறைவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டு அரசு உள்ளது. சுயமாக அனைத்து பொருட்களையும் தயாரிக்கும் திட்டத்தில் உள்ளது. பட்ஜெட்டில் இதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டு அரசின் திட்டத்திற்கு ஏற்றபடி 45 நிறுவனங்கள் உற்பத்திகளை மேற்கொள்ள முதல் கட்டமாக விருப்பம் தெரிவித்துள்ளன. மூன்றாம் அலை பரவல் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ள நிலையில்.. அதற்கு தமிழ்நாடு இப்போதே தயாராகி வருவது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது!

English summary
45 Big companies came forward for vaccine and O2 production after the call from Tamilnadu CM M K Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X