நான் மதிக்கும் தலைவர் மோடி.. ‛ஜெய்ஹிந்த்' கூறி பிரதமருக்கு ரஜினிகாந்த் நன்றி! பின்னணி இதுதான்
டெல்லி: நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் கால்பதித்து 50 ஆண்டுகளை நிறைவு செய்தார். இதையொட்டி ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த நிலையில் அவருக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில் ‛‛நீண்ட காலமாக நான் மதிக்கும் ஒரு தலைவரிடம் இரந்து வாழ்த்து பெற்றதை பெருமையாக கருதுகிறேன்'' என்று கூறி நெகிழ்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ‛டாப்' நடிகராக வலம் வருபர் நடிகர் ரஜினிகாந்த். ‛சூப்பர் ஸ்டார்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார். ரஜினிகாந்த் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் நட்பாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தான் ரஜினிகாந்த் சினிமா துறையில் கால்பதித்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன்'' எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்களே.. உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. நான் நீண்டகாலமாக மிகவும் மதிக்கும் ஒரு தலைவரிடமும் இருந்து வாழ்த்தை பெறுவது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. ஞ்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.. ஜெய்ஹிந்த்'' என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் 1975ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். கே பாலசந்தர் இயக்கத்தில் ‛அபூர்வ ராகங்கள்' என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன்பிறகு இன்று வரை நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛கூலி' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த திரைப்படத்துக்கு பாசிட்டிவ், நெகட்டிவ் என்று கலவையான விமர்சனங்கள் வருகின்றன. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14ல் ரிலீசான நிலையில் முதல் இரண்டு நாட்களிலேயே ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. மொத்தமாக ரூ.118.5 கோடி வசூலித்துள்ளது. தற்போதும் படத்தை பார்க்க தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications