வயசு 7தான்.. ரவீந்திரநாத் வாயை திறந்தா... குவியல் குவியலாக பல்... 5 மணி நேர ஆபரேஷன்!
7 வயது சிறுவன் வாயில் 526 பற்களை அகற்றி சென்னை டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்
Recommended Video
சென்னை: "வாயெல்லாம் பல்-ன்னு சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லுவோம்.. ஆனால் நிஜமாவே 7 வயசு பையனுக்கு வாயெல்லாம் பல்-தான்.. மொத்தம் 526 பற்கள்!
சென்னையை சேர்ந்தவர் பிரபுதாஸ். இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரவீந்திரநாத் என்ற 7 வயது மகன் உள்ளான்.

அவனுக்கு சின்ன வயசில் இருந்தே வலது கன்னம் வீக்கமாக இருந்திருக்கிறது. அதனால் 3 வயசு இருக்கும்போது, பக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் காட்டி உள்ளனர். ஆனால் சாதாரண பரிசோதனை மட்டும் செய்துவிட்டு அனுப்பி வைத்துவிட்டனர்.
நாள், ஆக, ஆக முகத்தில் வீக்கம் அதிகமாகி கொண்டே வந்தது. இதனால் பதறிபோன பிரபுதாஸ் உடனடியாக சிறுவனை சவிதா தனியார் பல் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அப்போது, எக்ஸ்ரே, சிடி ஸ்கேன்.. இதெல்லாம் எடுத்து பார்த்தபோதுதான் தெரிந்தது.. சிறுவனுக்கு கீழ் தாடையில், பற்கள் குவியல் குவியலாக இருந்திருக்கிறது.. கண்ணுக்கே இதெல்லாம் தெரியவில்லையாம். குட்டி குட்டியாக.. 526 பற்கள் இருந்திருக்கறது.

அதனால் ஆபரேஷன் செய்ய முடிவு செய்தார்கள். இதை ஒரு சவாலாகவும் டாக்டர்கள் எடுத்து கொண்டு, கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஆபரேஷன் செய்து, வாயிலிருந்த 526 பற்களையும் நீக்கி சாதித்துவிட்டனர். ஆபரேஷன் நடந்து 3 நாளைக்கு பிறகு சிறுவன் நார்மல் நிலைமைக்கு திரும்பி இருக்கிறானாம்.

ஒரு வாயில் இத்தனை பற்களை இதுவரைக்கும் நீக்கியதே இல்லையாம்.. இதுதான் முதல்முறை என்றும், இது ஒரு சாதனை என்றும் சொல்கிறார்கள் டாக்டர்கள்!
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications