சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோயம்பேடு சந்தையிலிருந்து ஊர் திரும்பியவர்களில் இன்று மட்டும் 60 பேருக்கு கொரோனா

Google Oneindia Tamil News

சென்னை: கோயம்பேடு சந்தையிலிருந்து ஊர் திரும்பியவர்களில் இன்று மட்டும் 60 பேருக்கு கொரோனா உறுதியானது.

தமிழகத்தில் கொரோனாவால் நேற்று 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6009 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 40 ஆனது.

சென்னையில் இதுவரை 2500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் மொத்த பாதிப்பில் கிட்டதட்ட 50 சதவீதம் பாதிப்பாகும்.

 உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது! உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது!

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கடந்த சில தினங்களாக கோயம்பேடு சந்தை மூலம் ஏராளமானோருக்கு கொரோனா பரவி வருகிறது. இதுவரை 500 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் பணியாற்றிவிட்டு ஊர் திரும்பியவர்களாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

விற்பனை

விற்பனை

இதில் பெரம்பலூர், கடலூர், அரியலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. அந்த வகையில் கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது. அந்த சந்தை திருமழிசைக்கு இடமாற்றப்பட்டுள்ளது. எனினும் அந்த இடத்தில் இன்னும் விற்பனை தொடங்கப்படவில்லை.

இன்று மட்டும் 60 பேருக்கு உறுதி

இன்று மட்டும் 60 பேருக்கு உறுதி

இந்த நிலையில் கோயம்பேடு சந்தையிலிருந்து ஊர் திரும்பியவர்களில் 3 மாவட்டங்களில் 60 பேருக்கு கொரோனா உறுதியானது. பெரம்பலூரில் அதிகப்பட்சமாக மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.

14 பேருக்கு உறுதி

14 பேருக்கு உறுதி

விழுப்புரத்தில் மேலும் 14 பேருக்கு உறுதியானது. காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும் கொரோனா உறுதியானது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தை நோய் பரப்பும் மையமாக மாறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Corona positive for 60 people from 3 districts those who are related to Koyambedu Market.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X