உயிர் பிழைக்க போராடும் 7 வயது சிறுவன்! நீங்கள் நினைத்தால் காப்பாற்ற முடியும்.. உடனே உதவுங்கள்!
சென்னை: திருவள்ளூரை சேர்ந்த 7 வயது சிறுவன் உதயகுமார், தீவிர இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்கவில்லை எனில், சிறுவன் உயிர் பிழைப்பதே சிக்கலாக மாறிவிடும். பிஞ்சு உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவியை உடனே செய்யுங்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார். இவரது 7 வயது சிறுவன் உதயகுமார். திருவள்ளூர் ஆரம்ப சுகாதார மையத்தில் பிறந்தான். மற்ற குழந்தைகளை போலவே சுட்டித்தனமாக இருந்தான் உதயகுமார்.

உதயகுமார் பிறந்து ஒன்பது மாதங்கள் ஆன போது திடீரென தொடர் வாந்தி, வயிற்றுப்போக்குடன் கடுமையாக நோய்வாய்ப்பட்டான். இதனால் பயந்துபோன பெற்றோர் அவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனையின் போது அவனுக்கு இதய பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் பெற்றோர் அவனைச் சென்னை மியாட் மருத்துவமனைக்கு (MIOT Hospitals) அழைத்துச் சென்றனர். அங்கு 'பிராடிகார்டியா' (Bradycardia) என்ற அபாயகரமான நிலை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இதயத் துடிப்பைச் சீராக்க, நிரந்தர 'டூயல்-சேம்பர் பேஸ்மேக்கர்' பொருத்தப்பட்டது. இந்த கடும் சூழ்நிலையை சமாளித்து அதில் இருந்து எப்படியோ மீண்டனர்.
சிறுவன் உதயகுமாரும் உடல்நிலை சீராகி மற்ற குழந்தைகளைப் போலவே தானும் பள்ளி, விளையாட்டு என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். தற்போது சிறுவனுக்கு 7 வயதாகிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவனுக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்று வலி என அடிக்கடி நோய்வாய்ப்பட்டான்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவன் வாழ்க்கை மீண்டும் தற்போது ஆபத்தில் உள்ளது. அதாவது மியாட் மருத்துவமனைப் பரிசோதனையில், மீண்டும் அவருக்கு இதய பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. பேஸ்மேக்கரை 'ட்ரான்ஸ்வீனஸ்' (transvenous) செயல்முறை மூலம் அவசரமாக மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். பேஸ்மேக்கரை மாற்றாவிட்டால், இதயம் சரியாகச் செயல்படாது எனவும், உயிர் பிழைப்பது கடினம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.4,00,000 செலவாகும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டதால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் சதீஷ் குமாரால் இவ்வளவு பெரிய தொகையை தயார் செய்ய முடியவில்லை. கூலி வேலைக்கு செல்லும் அவரது வருமானம் நிச்சயமற்றது என்பதாலும், அன்றாட குடும்ப அடிப்படைத் தேவைகளுக்கே போராடி வரும் சூழலில் இருப்பதால், அவ்வளவு பெரிய தொகையை அறுவை சிகிச்சைக்காக ஏற்பாடு செய்வது அவருக்குச் சாத்தியமில்லை.
மகனின் உயிரை காப்பாற்ற போராடி வரும் அவருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யும் சிறிய உதவி அவனது உயிரை காப்பாற்றும்.. நாம் செய்யும் சிறிய உதவி கூட சிறுவன் உதயகுமாரின் பேஸ்மேக்கரை மாற்றி, இதயம் மீண்டும் பாதுகாப்பாகத் துடிக்க உதவும். எனவே சிறிய தொகை என்று எல்லாம் நினைக்காமல் உங்களால் முடிந்த உதவியினை செய்யுங்கள்..
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications