மக்களே நோட் பண்ணிக்கோங்க.. சில சாலைகளில் குப்பை கொட்டினால் அபராதம்..சென்னை மாநகராட்சி சூப்பர் பிளான்
சென்னையில் 18 சாலைகளை குப்பையில்லா சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையில்லா பகுதிகள் என்ற திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக 18 சாலைகளை குப்பையில்லா சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாள்தோறும் சுமார் 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து குப்பை வண்டிகள் மூலமாகவும் பெறும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தெருக்களின் முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டும் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் லாரிகள் மூலமாக குப்பை சேகரிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

குப்பை இல்லா சாலைகளாக மாற்ற
இத்தகைய நிலையில், வரும் 11-ந்தேதி முதல் சென்னையில் முதல் கட்டமாக 18 சாலைகள் குப்பை இல்லாத சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- தனியார் கடைகள், அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக சேகரிக்கும் வகையில் பச்சை மற்றும் நீல நிறத்திலான இரண்டு குப்பை தொட்டிகளை வைக்க மாநகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

குப்பையில்லா பகுதிகள்
திடக்கழிவுகளை சாலை மற்றும் பொது இடங்களில் கொட்டுவது அல்லது தூக்கி எறிவதை தடுக்க மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில், திடக்கழிவு மேலாண்மையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் குப்பையில்லா பகுதிகள் என்ற திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக 18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

442 குப்பை தொட்டிகள்
அங்கு குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிய வகை குப்பைத் தொட்டிகள் அமைத்தல், சிறிய குப்பைத் தொட்டியுடன் கூடிய மிதி வண்டிகளில் தூய்மைப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை ரோந்து பணியில் ஈடுபடுதல், சாலைகளில் குப்பைகளை கொட்டும் நபர்களின் மீது அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த 18 சாலைகளில் குப்பையில்லா பகுதிகளாக அறிவிப்பதன் மூலம் 74.3 கி.மீ. நீள சாலைகள், 196 பேருந்து நிறுத்தங்கள் குப்பையில்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட உள்ளன. இந்த 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க ஏதுவாக 442 சிறிய வகையிலான குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நிலத்தை மீட்டெடுக்கும் பணி
இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் 250 ஏக்கரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வந்த 35 லட்சம் கன மீட்டர் அளவுள்ள குப்பைகளை 'பயோ-மைனிங்' முறையில் பிரித்து மறுசுழற்சி செய்து நிலத்தை மீட்டெடுக்கும் பணி 6 சிப்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

57 சதவீதம் பணி நிறைவு
மத்திய, மாநில அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் நிதி பங்களிப்புடன் ரூ.350 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் ஒப்பந்தக்காலம் வரும் 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் முடிந்து, நிலம் மீட்டெடுப்பு செய்யப்படும். தற்போது வரை சுமார் 57 சதவீதம் பணி நிறைவுற்ற நிலையில், 19.66 லட்சம் கனமீட்டர் அளவு குப்பைகள் 'பயோ-மைனிங்' செய்து முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications