சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை ஐஐடி பேராசிரியர்கள்.. அம்பலமான “ஷாக்” ரிப்போர்ட்! 83% உயர்சாதியினராம் - மீறப்பட்ட இடஒதுக்கீடு

Google Oneindia Tamil News

சென்னை: ஐஐடி மெட்ராஸில் பணிபுரியும் பேராசிரியர்களில் 83 விழுக்காடு உயர்சாதியினர் இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்து இருக்கிறது.

மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் கல்வி, தொழில், அரசு நிறுவனங்களில் பணிகள் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்டமாக இருக்கிறது.

அதன் அடிப்படையிலேயே இந்தியா முழுவதும் அரசு நிறுவன பணிகள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன.

ஐஐடி/ஐஐஎம்மில் படித்தால் வீடு வாடகைக்கு! பெங்களூரில் ஓனர்கள் அட்ராசிட்டி! நீயா நானா லிஸ்டில் இல்லீயேஐஐடி/ஐஐஎம்மில் படித்தால் வீடு வாடகைக்கு! பெங்களூரில் ஓனர்கள் அட்ராசிட்டி! நீயா நானா லிஸ்டில் இல்லீயே

ஐஐடி, ஐஐஎம்

ஐஐடி, ஐஐஎம்

ஆனால், இந்திய கல்வி நிறுவனங்களிலேயே தலை சிறந்ததாக கூறப்படும் மத்திய அரசால் நடத்தப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி) மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (ஐஐஎம்) ஆகியவற்றில் மட்டும் இடஒதுக்கீடு விதிகள் கடைபிடிக்கப்படுவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

இடஒதுக்கீடு மீறல்

இடஒதுக்கீடு மீறல்

குறிப்பாக இடஒதுக்கீடை மீறி உயர்சாதியினருக்கு மட்டுமே இந்த நிறுவனங்களில் பேராசிரியர் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டு வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் மத்திய அரசோ, ஐஐடி நிர்வாகமோ இதுகுறித்து எந்த பதிலும் அளிக்காமலே இருந்து வருகின்றன.

சாதி, மத ஒடுக்குமுறைகள்

சாதி, மத ஒடுக்குமுறைகள்

இதன் காரணமாக ஐஐடி வளாகங்களில் சாதி, மத ஒடுக்குமுறைகள் நிகழ்வதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்களும், மர்ம மரணங்களும் ஐஐடி வளாகங்களில் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாததால் இவற்றில் உயர்சாதியினர் ஆதிக்கம் அதிகம் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன.

ஃபாத்திமா மர்ம மரணம்

ஃபாத்திமா மர்ம மரணம்


குறிப்பாக சென்னை ஐஐடியில் சாதி ஒடுக்குறை அதிகம் இருப்பதாக அங்கு பணிபுரிந்த கேரளாவை சேர்ந்த உதவி பேராசிரியர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அதேபோல் கேரளாவை சேர்ந்த மாணவி ஃபாத்திமா மர்மமான முறையில் உயிரிழந்ததும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அவர் அங்கு பணிபுரிந்த பேராசிரியர் சுதர்ஷன் பத்மனாபன் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டி தனது செல்போனில் எழுதி இருந்த படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

ஆர்.டி.ஐ தகவல்

ஆர்.டி.ஐ தகவல்

இந்த நிலையில் சென்னை ஐஐடியில் எந்த சமூகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் அதிகளவில் பணிபுரிகிறார்கள் என தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இளைய தலைமுறை என்ற அமைப்பு விண்ணப்பித்து இருந்தது. இந்த கடிதத்துக்கு கிடைத்த பதிலை அந்த அமைப்பு நேற்று வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

உயர்சாதியினர் அதிகம்

உயர்சாதியினர் அதிகம்

அதன்படி ஐஐடி சென்னையில் மொத்தம் 619 பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் 514 பேர் உயர்சாதியினராக இருந்து வருகிறார்கள். அதாவது சென்னை ஐஐடியில் பணிபுரியும் பேராசிரியர்கள் 83 விழுக்காடு உயர்சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே. இதில், 70 பேர் (11.30%) மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

எஸ்.சி, எஸ்.டி குறைவு

எஸ்.சி, எஸ்.டி குறைவு

பட்டியலினத்தை பொறுத்தவரை 619 பேராசிரியர்களில் 27 பேர், அதாவது 4.30 சதவீதம் மட்டுமே உள்ளனர். அதேபோல் பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த 8 பேர் மட்டுமே சென்னை ஐஐடியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களின் சதவீதம் வெறும் 1.30% மட்டுமேயாகும். இதனை சுட்டிக்காட்டி இளையதலைமுறை அமைப்பு விமர்சித்து இருக்கிறது.

 பெரும் அநீதி

பெரும் அநீதி

அதில், "இளையதலைமுறை சார்பாக 29/11/2022 அன்று பெறப்பட்ட RTI தகவலின்படி, தமிழ்நாட்டில் உள்ள IIT மெட்ராஸ் இல் பணிபுரியும் பேராசிரியர்களில் 83% உயர்சாதிகள். என்ன கொடுமை இது? இவர்களுக்கு கூடுதலாக 10% இடஒதுக்கீடு என்பது OBC, SC, ST மக்களுக்கு செய்யும் அநீதி." என்று முகநூலில் பதிவிட்டு உள்ளது.

English summary
The Right to Information Act has revealed that 83 percent of professors working at IIT Madras are from upper castes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X