9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்... அதிகரித்த ஆர்வம்... 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல்..!
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி வார்டு கவுன்சிலர் தொடங்கி மாவட்ட கவுன்சிலர் வரையிலான பல்வேறு பதவியிடங்களுக்கு 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இதனைத் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் வார்டு மறுவரையறை காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு இந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

இதனிடையே செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அந்த உத்தரவை ஏற்று செயல்படுத்தும் வகையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவுபெற்றது, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இந்நிலையில் பதவி வாரியாக வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள் விவரம் பின்வருமாறு;
கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி -15,967 பேர் வேட்புமனுத் தாக்கல்
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் -72,027 பேர் வேட்புமனுத் தாக்கல்
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 1,122 பேர் வேட்புமனுத் தாக்கல்
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - 8,671 பேர் வேட்புமனுத் தாக்கல்
இதனிடையே வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள செப்டம்பர் 25-ம் தேதியே கடைசி நாளாகும். 9 மாவட்டங்களிலும் பரவலாக பார்க்கும் போது தேர்தலில் போட்டியிட அதிகமானோர் ஆர்வம் காட்டியிருப்பது தெரிய வருகிறது. குறிப்பாக படித்த இளைஞர்களும், இளம்பெண்களும் அதிகளவில் உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.
வரும் சனிக்கிழமை முதல் மேற்கண்ட 9 மாவட்டங்களிலும் பிரச்சாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications